2011 உலகக்கோப்பையில் யூசுப் பத்தான், தான், ரெய்னா இவர்களில் யாரைத் தேர்வு செய்வது என்பதில் தோனி எப்போதும் ரெய்னாவுக்கு பக்கபலமாகவே திகழ்வார் என்று அந்த உலகக்கோப்பை நாயகன் யுவராஜ் சிங் தெரிவித்தார்.
ஸ்போர்ட்ஸ் டாக் என்பதில் யுவராஜ் சிங் தெரிவிக்கும் போது, “சுரேஷ் ரெய்னாவுக்கு அப்போது பெரிய ஆதரவு இருந்தது, காரணம் தோனி அவரை எப்போதும் தாங்கிப் ப்பிடிப்பார். ஒவ்வொரு கேப்டனுக்கும் பிடித்த வீரர் என்று யாராவது இருப்பார்கள், 2011 உலகக்கோப்பையின் போது தோனிக்கு ரெய்னாதான்.
யூசுப் பத்தானும் அப்போது பிரமாதமாக ஆடி வந்தார். நானும் நன்றாக ஆடினேன், விக்கெட்டுளை கைப்பற்றினேன். அப்போது இடது கை ஸ்பின்னர் அணியில் இல்லை நான் விக்கெட்டுகளைக் கைப்பற்றி வந்தேன், அதனால் வேறு வழியில்லை” என்று தெரிவித்தார்.
கிரிக்கெட்டில் திறமைகுத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமே தவிர தனக்கு இவரைப் பிடிக்கும் இவரைப் பிடிக்காது என்பது சொந்த ஆசாபாசங்களின் மூலம் சாதகம் செய்வதையே குறிக்கும்.
தோனி பற்றி யுவராஜ் சிங் இப்படிக் கூறுவது முதல் முறையல்ல, யுவராஜ் சிங் மட்டுமே இப்படி தோனியைப் பற்றி கூறுவதில்லை கம்பீர், சேவாக் உள்ளிட்ட வீரர்களும் தோனியின் இத்தகைய போக்குகளை அம்பலப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளும் நடைபெறாததால் தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் தோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமுது அசாருதின் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள அவர் “தோனிக்கு என்ன தேவை என்பதை அவர்தான் கூற முடியும், அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். இப்போதைக்கு நாட்டின் சூழ்நிலை சரியில்லை. இப்போதைக்கு ஐபிஎல் போட்டிகளும் நடைபெறப்போவதில்லை. இதனால் இப்போதே தோனி குறித்த பிரச்னையை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். இதுவும் அவருடைய தனிப்பட்ட விருப்பம்தான்”
மேலும் தொடர்ந்த அசாருதின் “தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினம்தான். அப்படியே திருபம்புவதாக இருந்தாலும் தேர்வாளர்கள் அவருடைய திறனை பரிசோதிப்பார்கள். ஏனென்றால் அவர் கிரிக்கெட் விளையாடி பல மாதங்கள் ஆகிறது. நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் கிரிக்கெட் தொடர்ந்து விளையாட வேண்டும். முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும் கிரிக்கெட் பயிற்சி என்பது வேறு விளையாடுவது என்பது வேறு” என கூறியுள்ளார்.