தோனிக்கு இந்திய அணிக்காக ஆடுவதை விட இந்த அணிக்காக ஆடுவது தான் மகிழ்ச்சி! தோனி பற்றி யாருக்கும் தெரியாத இரண்டு விஷயத்தை புட்டு புட்டு வைத்த குமார் சங்ககாரா!

தோனிக்கு இந்திய அணிக்காக ஆடுவதை விட இந்த அணிக்காக ஆடுவது தான் மகிழ்ச்சி! தோனி பற்றி யாருக்கும் தெரியாத இரண்டு விஷயத்தை புட்டு புட்டு வைத்த குமார் சங்ககாரா!

தோனி இந்திய அணிக்காக விளையாடிய ஒரு வருடம் ஆகிவிட்டது இன்னும் ஓய்வினை அறிவிக்கவில்லை 39 வயது ஆகிவிட்டது. வெகு சீக்கிரம் இந்திய அணிக்காக ஆடுவதில் இருந்து ஓய்வு அறிவிப்பார் என்று பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து பேசிய முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா தெளிவான இரண்டு விஷயங்களை கூறினார். அவர் கூறுகையில்..

பல வீரர்கள் ஓய்வினை அறிவிக்கும்போது அனைவருக்கும் தெரிவிப்பார்கள். செய்தியை வெளியிடுவார்கள். அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடுவார்கள். ஆனால் ஒரு சில வீரர்கள் இப்படிப்பட்ட விஷயங்கள் தேவை இல்லை என்று நினைக்கலாம். சில வீரர்கள் ஓய்வு குறித்து குறித்து முடிவு எடுத்துவிட்டால் சப்தமில்லாமல் அவர்களை மெதுவாக விலகிக் கொள்வார்கள்.

யார் என்ன வேண்டுமானாலும் பேசட்டும், என மக்களிடம் அந்த முடிவை விட்டுவிடுவார்கள். அதே போன்று அந்த வீரர்கள் தாங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று மக்களைப் பேச வைப்பார்கள். அப்படித்தான் அவருக்கு இருக்கிறது. எது சிறந்தது என்று அவருக்கே தெரியும். பிசிசிஐ என்ன சொல்கிறதோ அதனை சரியாக கேட்கிறார் .

முடிவை எடுப்பதற்கு இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார் யாருக்கும் பாதிக்காத வகையில் முடிவை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் அவர் இந்தியாவிற்காக தேர்வாகவில்லை என்றாலும் மகிழ்ச்சியாகத் தான் இருப்பார் இந்திய அணிக்காக ஆடுவதை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி சந்தோசமாக இருப்பார் தோனி திடீரென்று ஒருநாள் தோனியை பயிற்சிக்கு வரவில்லை என்றால் அப்போது நாம் தெரிந்து கொள்ளலாம் அவர் ஓய்வு பெற்று விட்டார் என்று என்று கூறுகிறார் குமார் சங்ககாரா

Mohamed:

This website uses cookies.