கிரிக்கெட் உலகில் புதிய அவதாரத்துடன் களமிறங்கும் தோனி! புதிய குண்டை தூக்கி போட்ட பாகிஸ்தான் வீரர்!

மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதற்கு பிறகு ஐபிஎல் தொடரில் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று மிக அற்புதமாக சென்னை அணியை வழி நடத்தினார்.

ஐந்து போட்டிகளில் வெற்றி அடைந்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருப்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், மகேந்திர சிங் தோனி நிச்சயமாக கோச்சாக களமிறங்கி இளம் கிரிக்கெட் வீரர்களை வழிநடத்தி அவர்களுக்கு உதவி செய்யப் போகிறார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தனிஷ் கணெரியா தற்பொழுது கூறியிருக்கிறார்

மகேந்திர சிங் தோனி வர்ணனையாளராக ஒருபோதும் செயல்பட மாட்டார்

பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றவுடன் கிரிக்கெட் வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுப்பார்கள். ஆனால் ஒரு சிலர் கிரிக்கெட் வீரர்கள் அப்படியே நேர்மாறாக கோச்சிங் வேலையை மேற்கொள்வார்கள். அந்த வரிசையில் நிச்சயமாக மகேந்திர சிங் தோனி இரண்டாவது ரகம் என்று தனிஷ் கணெரியா தற்பொழுது கூறியுள்ளார்.

மகேந்திர சிங் தோனிக்கு இளம் வீரர்களை எப்படி ஊக்குவிக்க வேண்டும் என்கிற அடிப்படைப் பண்பு தெரியும். சென்னை அணியில் பல இளம் வீரர்களை அவர் வழி நடத்தி அவர்களது கிரிக்கெட்டை மேம்படுத்தி இருக்கிறார். எனவே நிச்சயமாக மகேந்திரசிங் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றவுடன், கிரிக்கெட் கோச்சாக கலந்து இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

இளம் வீரர்களின் கிரிக்கெட்டை அவர் மேம்படுத்துவார்

நிச்சயமாக அவர் கிரிக்கெட் கோச் ஆக களமிறங்கி நிறைய இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, அவர்களின் கிரிக்கெட் ஆட்டத்தை மேம்படுத்த போகிறார். அவருடைய தலைமை பண்பாக இது நீண்ட காலமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு போட்டி முடிந்தவுடன், அந்த போட்டியில் விளையாடிய இளம் வீரர்களுடன் மகேந்திர சிங் தோனி நீண்ட நேரம் உரையாடி நாம் பார்த்திருப்போம்.

எனவே இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கையில் மகேந்திர சிங் தோனி கூடியவிரைவில் கோச்சாக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது என்று இறுதியாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தனிஷ் கணெரியா கூறி முடித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.