வரம்பு மீறி அனைத்திலும் தலையிடுகிறாரா விராட் கோஹ்லி..? எம்.எஸ்.கே பிரசாத் ஓபன் டாக் !!

வரம்பு மீறி அனைத்திலும் தலையிடுகிறாரா விராட் கோஹ்லி..? எம்.எஸ்.கே பிரசாத் ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர் வுக்குழு தலைவரான எஸ்எம்கே பிரசாத் பிடிஐ நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்:

தேர்வுக்குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இந் திய அணிக்காக வெவ்வேறு வடிவி லான கிரிக்கெட்டில் விளையாடி உள்ளோம். எங்களது பணி நிய மனத்தின் போது இவை அடிப்படை அளவுகோலாக இருந்தன. சர்வதேச கிரிக்கெட்டை தவிர நாங் கள் (தேர்வுக்குழு உறுப்பினர்கள்) 477 முதல்தர ஆட்டங்களில் பங் கேற்றுள்ளோம். மேலும் எங் களது பணி காலத்தில் 200 முதல் தர ஆட்டங்களை நேரில் பார்த் துள்ளோம்.

இந்த எண்ணிக்கையிலான விளையாட்டுகளை பார்த்த பிறகு வீரர்கள் மற்றும் தேர்வாளர்கள் என்ற முறையில் எங்கள் அனு பவம் சரியான திறமைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு போதுமானது என்று நீங்கள் நினைக்க வில்லையா?

எங்களது அந்தஸ்து, சர்வதேச கிரிக்கெட் அனுபவம் குறித்து சிலர் பேசுகின்றனர். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் எட் ஸ்மித் ஒரே ஒரு டெஸ்டில்தான் விளையாடி உள்ளார். சிறிது இடைவெளியுடன் 10 ஆண்டுகளுக் கும் மேலாக ஆஸ்திரேலிய கிரிக் கெட்வாரிய தேர்வுக்கு தலைவராக செயல்பட்டு வரும் டிரெவர் ஹான்ஸ், 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றிருந்தார். 128 டெஸ்ட், 244 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மார்க் வாஹ் கூட, டிரெவர் ஹான்ஸ் கீழ்தான் பணியாற்றினார். இதேபோல்தான் கிரெக் சேப்பலும் ஆஸ்திரேலிய வாரியத்தில் பொறுப்பு வகிக்கிறார்.

இந்த நாடுகளில் அந்தஸ்தும், சர்வதேச கிரிக்கெட் அனுபவமும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாத பட்சத்தில், நமது நாட்டில் மட்டும் எப்படி எடுத்துக்கொள்ளப்படும். இந்த வகையில்தான் நான் தேர்வுக் குழுவில் இருக்கிறேன். ஒவ்வொரு பணிக்கும் அதன் சொந்த தேவைகள் உள்ளன.

சர்வதேச கிரிக்கெட் அனுபவம் ஒரு கேள்வியாக எழுந்தால், நாம் அதிகம் போற்றும் மறைந்த ராஜ் சிங் துங்கர்புர், தேர்வுக்குழு தலைவராக இருந்திருக்க மாட்டார். அவர், ஒருபோதும் சர்வதேச கிரிக்கெட் விளையாடியது இல்லை. அவர் தேர்வுக்குழு தலைவராக இருந் திருக்காவிட்டால் சச்சின் டெண்டுல் கர் என்ற வைரம் 16 வயதிலேயே கண்டறியப்பட்டிருக்காது.

புதிய வீரர்கள் 35 பேரை உருவாக்கி அவர்களை இந்திய அணியில் 3 விதமான கிரிக்கெட் வடிவங்களில் விளையாட வைத் துள்ளோம். அனைத்து துறையிலும் போதுமான அளவில் வீரர்களை உருவாக்கி அணியின் பலத்தை அதிகரித்துள்ளோம். திறமையான குழுவை உருவாக்கி அடுத்து வரும் தேர்வுக்குழுவினரின் கைகளில் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

Mohamed:

This website uses cookies.