3வது டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக்கு பதில் ரிஷப் பந்த் ஆடட்டும் : திலீப் வெங்காசர்க்கார்

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 18 ஆம் தேதி நாட்டிங்கம்மில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சுக்கு பலம் சேர்க்கும் வகையில் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா அணியின் லெவனில் சேர்க்கப்படவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தது சற்றே ஆறுதலாக இருந்தது.

ஆனால், லாட்ஸ் போட்டியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. கோலி உட்பட அனைத்து வீரர்களும் சொதப்பினார்கள். முதல் இன்னிங்சில் 107, 2வது இன்னிங்சில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இரண்டு இன்னிங்சில் அஸ்வின்தான்(29, 33) அதிக ஸ்கோர் அடித்தார். மேலும் ஒரு இன்னிங்ஸ் 159 ரன்கள் வித்தியாசத்தில் லார்ட்ஸில் படுதோல்வி அடைந்தது, இதனால், இந்திய வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இரண்டு போட்டியிலும் முக்கிய வீரர்கள் பலரும் இங்கிலாந்து வேகபந்து வீச்சுக்கு சொற்ப ரன்களில் இரையாகினார்.

அதுமட்டுமல்லாமல் அணி தேர்விலும் தவறு செய்து விட்டதாக கேப்டன் கோலியே ஒப்புக்கொண்டார். இங்கிலாந்து அணியை பொறுத்தவரை பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் கலக்கி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 18 ஆம் தேதி நாட்டிங்கம்மில் தொடங்குகிறது. இந்திய அணியை பொறுத்தவரை இந்தப் போட்டி முக்கியமானது.

இப்போட்டியில் வென்றால் இங்கிலாந்து அணி எளிதாக இத்தொடரை வென்றுவிடும். இதனால் தன் நெம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருகிறது இந்திய அணி. முதல் போட்டியில் 147 ரன்கள் எடுத்து அசத்திய கோலியும் முதுகு வலியால் அவதிபடுவது இந்திய அணிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் நாட்டிங்கம்மில் தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய இடத்திலும் இருகிறார் கேப்டன் கோலி. காரணம் கடந்த 2014-ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து விளையாடிய போது நாட்டிங்கம் டெஸ்டில் கோலி எடுத்து 9 ரன்கள் மட்டுமே. முதல் இன்னிங்ஸில் 1, இரண்டாம் இன்னிங்ஸில் 8 மட்டுமே.ஏன் அதே போட்டியில் வேக பந்து வீச்சாளர் முகமது ஷமி கூட ஆட்டமிழக்காமல் அரைசதம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, அயர்லாந்துடன் நடந்த முதல் டி20 போட்டியின் போது இடது கை பெருவிரலில் காயம் அடைந்தார். அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதால் அவர் டி20 தொடரில் பங்கேற்கவில்லை. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடருக்குள் அவர் குணமாகிவிடுவார் என கூறப்பட்டது.

ஆனால், அவர் அணியில் இடம்பெறவில்லை. இந்திய அணியும் ஒருநாள் தொடரை இழந்ததது. இப்போது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், அணியின் வேகப்பந்து வீச்சுக்கு பலம் சேர்க்கும் வகையில் பும்ரா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார்.

 

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. இந்திய அணியின் பேட்டிங் தோல்வி குறித்து கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் பிசிசிஐயும் விளக்கம் கேட்டுள்ளது. இந்த நிலையில் அணியில் மீண்டும் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, காயம் காரணமாக இரண்டு டெஸ்ட்களில் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது உடல்நிலை தேறியுள்ளார்.இரண்டாவது டெஸ்டிலேயே அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பும்ரா வரும் பட்சத்தில், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு அடுத்த டெஸ்டில் வாய்ப்பு இருக்காது.

Vignesh G:

This website uses cookies.