மேலும் பிரச்சனையில் மட்டுவதில் இருந்து தப்பித்தார் சண்டிமால்!!
பால் டேம்பரிங் விஷயத்தில் அரிசி நடவடிக்கைக்கு பின்னர் இலங்கை விளையாட்டு துறை ஆண்டிமால் மீண்டு நடவடிக்கை எடுப்பதாக இருந்தது. தற்போது அந்த நடவடிக்கை கைவிடப்படுவதாக இலங்கை விளையாட்டு துறை அறிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் கூறியதாவது,
ஆடுகளத்திற்கு செல்லாமல் இருப்பது தண்டிக்கப்பட வேண்டியது. ஆனால் ஒரு கேப்டனாக அவருக்கு ஐசிசி தண்டனை கொடுத்துவிட்டது. மேலும், நாங்கள் அவர் மீண்டு நடவடிக்கை எடுக்க தேவை இல்லை என நினைக்கிறோ
என கூறினார் கரீம்.
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கெதிராக செயிண்ட் லூயிஸில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின்போது இலங்கை வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக நடுவர்கள் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து, பந்தை மாற்ற நடுவர்கள் முடிவெடுத்தபோது, இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை வீரர்கள் களத்திற்கு வர மறுத்தனர். இந்நிலையில், தாமதமாக தொடங்கிய போட்டி பின்னர் டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமாலுடன் போட்டி நடுவர் நடத்திய விசாரணையில், அவரது முன்னுக்குப் பின் முரணான பதில்கள், அவர் குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானது. பந்தை எச்சிலோடு சேர்த்து வேறு ஏதோவொரு பொருளால் சேதப்படுத்தி, பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்திருப்பது இதன்மூலம் நிரூபணமானது. தற்போது, இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதித்தும், போட்டி ஊதியத்தில் 100 சதவீதத்தை அபராதமாக விதித்தும் ஐசிசி உத்தரவிட்டிருந்தது.
.மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் செயிண்ட் லூயிஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் பந்தை சேதப்படுத்தியிருக்கலாம் என நடுவர்கள் சந்தேகித்தனர். பின்னர் போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத் தினேஷ் சண்டிமாலுடன் நடத்திய விசாரணையில், அவரது பதிலில் திருப்தி இல்லாததால், போட்டி சம்பளத்தில் 100 சதவீதமும், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.
விளையாட்டின்போது இனிப்பான பொருளை வாயில் போட்டு மென்று, அதன் எச்சிலால் பந்தின் தன்மையை மாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தினேஷ் சண்டிமால் தனது தடையை எதிர்த்து ஐசிசி-யிடம் மேல்முறையீடு செய்தார். இதுதொடர்பாக ஐசிசி நிர்ணயித்த விசாரணை அதிகாரி மைக்கேல் ஃபிலிப் நடத்திய விசாரணையில் தினேஷ் சண்டிமால் கலந்துகொண்டார். சுமார் 4 மணிநேரம் நடந்த இந்த விசாரணையில், திருப்தி இல்லாததால், மைக்கேல் ஃபிலிப் முன்னர் விதித்த தடையை நீட்டித்தார். இதனால்,பார்படாஸில் நடக்க இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தினேஷ் சண்டிமால் பங்கேற்கவில்லை.