ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக்? இருவரில் யாரை என்னோட உலகக்கோப்பை பிளேயிங் லெவனில் வைத்திருப்பேன் – கடைசியாக முடிவை சொன்ன ரோகித் சர்மா!

ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் இருவரில் யார் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.

டி20 உலக கோப்பை தொடர் இன்னும் ஓரிரு வாரங்களில் துவங்க இருக்கிறது. செப்டம்பர் 12ஆம் தேதி 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுவிட்டது. தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்கள் குறித்த பேச்சுக்கள் மட்டுமே அடிபட்டு வருகின்றன.

பந்துவீச்சில் சற்று வலுவான அணியாக தெரியவில்லை. ஆகையால் தெளிவான பதவிச்சாளர்களை எடுக்க வேண்டும் என பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. அதன் பிறகு பேட்டிங்கில் யார் துவக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும்? என்பது பற்றியும் விவாதம் நிலவியது. சமீபத்தில் ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் இருவரில் யார் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும்? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. ஒன்றன்பின் மற்றொருவராக முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சனர்கள் பலர் தங்களது முடிவை தெரிவித்து வந்த நிலையில், இறுதியாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சமீபத்திய பேட்டியில் இருவரில் யார் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்பது பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில்,

“சூழலுக்கு ஏற்றால் போல அணியின் தேர்வு மாறும். என்னை பொறுத்தவரை இரண்டு வீரர்களும் வரும் உலக கோப்பையில் போதுமான போட்டிகளில் விளையாட வேண்டும். ஆசிய கோப்பை தொடரில் நாங்கள் செய்த சோதனை மிகவும் பின்னடைவாக முடிந்துவிட்டது. வீரர்கள் தேர்வில், குறிப்பிட்ட போட்டிக்கு இடது கை பேட்டிங் வீரர் தேவை என்றால் நாங்கள் ரிஷப் பண்ட்டுக்கு இடம் கொடுப்போம். வலதுகை பேட்டிங் தேவை என்றால் தினேஷ் கார்த்திக்கை எடுப்போம். எங்களது திட்டம் அவ்வாறு தான் இருக்கிறது. போதுமானவரை ஒரே மாதிரியான பேட்டிங் வரிசையை தொடர் முழுவதும் வைத்திருப்பதற்கு திட்டமிட்டு வருகிறோம்.

ஆஸ்திரேலியா தொடரில் தினேஷ் கார்த்திக் வெறும் 3 பந்துகள் மட்டுமே பிடித்திருந்தார். ஆகையால் அவருக்கு இன்னும் கூடுமான போட்டிகளில் களமிறங்குவதற்கு வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். இறுதியில் இரண்டு வீரர்களும் இந்திய அணிக்கு முக்கியம் என்பதால் அவர்களை சரியாக மேலாண்மை செய்யும் அளவில் எங்களது திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

இருவரில் ஒருவரை வேண்டுமென்று வெளியில் வைப்பது எங்கள் எண்ணம் இல்லை. குறிப்பிட்ட ஆட்டத்தில் யார் 11 வீரர்கள் சரியாக இருப்பார்கள் என்று திட்டமிட்டு எங்கள் முடிவுகளை எடுத்து வருகிறோம்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.