மிகவும் மோசமான சாதனையை பதிவு செய்த தினேஷ் கார்த்திக் !!

மிகவும் மோசமான சாதனையை பதிவு செய்த தினேஷ் கார்த்திக்

சையத் முஷ்டாக் அலி தொடரில் உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக், மோசமான ரெக்கார்டு ஒன்றுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டி கடந்த 12ம் தேதி நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி, 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது. உத்தர பிரதேச அணி 169 ரன்கள் என்ற இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் அதிரடியாக ஆடிய தமிழ்நாடு அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்களை குவித்து ஹிட் விக்கெட் ஆகி ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் ஹிட் விக்கெட் ஆனதன் மூலம் லிஸ்ட் ஏ, முதல் தர போட்டிகள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளிலும் ஹிட் விக்கெட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை செய்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

தமிழ்நாடு அபார வெற்றி;

சையத் முஷ்டாக் அலி தொடரில் திரிபுரா அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது.

முதல் நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, ஐந்தாவது போட்டியில் திரிபுராவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய திரிபுரா அணியின் முதல் 7 விக்கெட்டுகளை 9 ரன்களுக்கே வீழ்த்திவிட்டனர் தமிழ்நாடு பவுலர்கள்.

முதல் 7 வீரர்களில் ஐந்து வீரர்கள் டக் அவுட். 5.1 ஓவருக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்ட திரிபுரா அணியின் 8 மற்றும் 9ம் வரிசை பேட்ஸ்மேன்கள் இருவரும் சேர்ந்து எஞ்சிய 15 ஓவர்களையும் ஆடினர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 79 ரன்கள் அடித்தது. தமிழ்நாடு அணியின் சார்பில் ரவி ஸ்ரீநிவாசன் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளையும் டி.நடராஜன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

In Vijay Hazare Trophy, Tamil Nadu beat Railways by eight wickets while in other match, Punjab registered a three-wicket win over Baroda in an Elite Group B match.

வெறும் 80 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்களாக பாபா அபரஜித்தும் வாஷிங்டன் சுந்தரும் இறங்கினர். வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக பேட்டிங் ஆடினார். மறுமுனையில் அபரஜித் நிதானமாக ஆடினர். சுந்தர் 32 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 46 ரன்களை விளாசி, வெற்றிக்கு வெறும் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டமிழந்தார். மூன்றாம் வரிசையில் பேட்டிங் ஆடவந்த முருகன் அஷ்வின் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 13வது ஓவரில் இலக்கை எட்டி தமிழ்நாடு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Mohamed:

This website uses cookies.