யுவராஜ் சிங்கிற்க்கு , உங்க ரிஸ்க்ல வாய்ப்பு குடுங்க : சபா கரீம்
யுவராஜ் சிங் தற்போது ஓய்வில் இருக்கிறார் என தேர்வுக்குழு தலைவரால் அறிவிக்கப்பட்டாலும் இந்தியாவின் அணியில் அவருக்கு மீண்டும் யுவராஜ் சிங்கிற்க்கு இடம் கிடைக்குமா என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மீண்டும் மீண்டும் எழுந்த வண்ணம் தான் உள்ளது.
தற்போது ஆஸ்திரலியாவுடனான் பயிற்சி ஆட்டத்தில் ஆடும் 14 பேர் கொண்ட அணி அற்விக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கேள்விகள் கொழுந்தி விட்டு எரியத் துவங்கியுள்ளது.
,தற்போது இந்திய நாட்டின் தலைசிறந்த முதல் 74 வீரர்கள் பட்டியலில் கூட யுவராஜ் சிங் இடம்பெறவில்லை எனத் தெரிகிறது.
இதற்க்கான காரணம் அவரது உடல் தகுதியே என கூறப்படுகிறது.
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். டோனி தலைமையிலான இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையையும், 2011-ம் ஆண்டு 50 உலகக்கோப்பையையும் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். யுவராஜ் சிங்கிற்க்கு
நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், அதில் இருந்து மீண்டு இந்திய அணிக்கு திரும்பினார்.
பின்னர் நீண்ட காலமாக இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலியா தொடரின்போது டி20 அணியில் இடம்பிடித்தார்.
தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்த யுவராஜ் சிங், இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்டார்.
அதன்பின் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெறவில்லை.
பின்னர் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
இதற்கான இந்திய அணியிலும் யுவராஜ் சிங்கிற்க்கு இடம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தேர்வுக்குழு குறிப்பிடும்போது யுவராஜ் சிங்கிற்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்றது.
ஆனால், பிட்னஸ் டெஸ்டில் வெற்றி பெறவில்லை என்பதால் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது.
தற்போது பிசிசிஐ பிட்னஸ் டெஸ்ட் முறையை கடைபிடிப்பதால் யுவராஜ் சிங் மீண்டும் அணிக்கு திரும்புவது கடினம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் யுவராஜ் சிங்கிற்கு கருணை காட்டினால் உங்களது சொந்த ரிஸ்க் என்று முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங்கின் எதிர்காலம் குறித்து சபா கரீம் கூறுகையில்
‘‘உங்களுடைய (தேர்வாளர்கள்) சொந்த ரிஸ்க்-கில் யுவராஜ் சிங்கிற்கு கருணை காட்டலாம்.
அவர் ஒரு பீனிக்ஸ் பறவை போன்றவர்.
பீனிக்ஸ் பறவை போன்று சாம்பலாகிய பின்னரும் திரும்பி வரக்கூடியவர்.
அவரது மீதான விமர்சனங்களை தவறு என்று நிரூபித்தவர்.
சில விஷயங்களில் அவர் கடினமாக உழைக்க வேண்டும்.
அதேவேளையில் அவர் ஒரு சாம்பியன் வீரர். மீண்டும் தனது திறமையை நிரூபிப்பார்.
நான் தேர்வுக்குழுவில் இருக்கும்போது, யுவராஜ் சிங் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினம் என நினைத்தோம்.
ஆனால், அவர் கடின முயற்சி செய்து மீண்டும் அணிக்கு திரும்பி நாங்கள் நினைத்தது தவறு என்பதை நிரூபித்தார்’’ என்றார்.