ஹர்திக் பாண்டியா அவ்வளவு எல்லாம் வொர்த் இல்ல; முன்னாள் வீரர் காட்டம் !!

ஹர்திக் பாண்டியா அவ்வளவு எல்லாம் வொர்த் இல்ல; முன்னாள் வீரர் காட்டம்

இந்திய அணியின்  முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ்வுடன் ஒப்பிடும் அளவிற்கு ஹர்திக் பாண்டியா இன்னும் வளரவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் ஹர்திக் பாண்டியா, சில சிக்கலான சமயங்களில் கை கொடுத்து இந்திய அணியின் மானத்தை காப்பற்றியதால் இவரை சிலர் இவர் தான் இந்திய அணியின் அடுத்த தோனி, தோனியின் இடத்திற்கு சரியான ஒரு நபர் கிடைத்துவிட்டார் என்று கூறவது உண்டு.

ஆனால், பெரும்பாலானோர் ஆல் ரவுண்டரான இவரை, இந்திய அணியின்  உலகக்கோப்பை கனவை நனவாக்கிய முன்னாள் கேப்டன் கபில் தேவ்வுடனே ஒப்பிட்டு புகழ்ந்து வருகின்றனர்

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி, கபில் தேவ்வுடன் ஹர்திக் பாண்டியாவை ஒப்பிட கூடாது  என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரோஜர் பின்னி கூறியதாவது;  “ஹர்திக் பாண்டியா பேட்டிங் மூலம் அணிக்கு தனது பங்களிப்பை சரியாக தருவதில்லை. எதோ ஓரளவுக்கு பந்துவீசுவதால் ஆல் ரவுண்டர் என்று பெயர் வாங்கி விட்டதால் ஹர்திக் பாண்டியாவை கபில் தேவ்வுடன் ஒப்பிடுவது சரியல்ல.

கபில்தேவ் இந்திய அணிக்கு வருவதற்கு முன்பு முதல்தர போட்டியில் நிறைய சதங்கள் அடித்துள்ளார். ஆனால் ஹர்த்திக் பாண்ட்யா முதல்தர போட்டிகளில் அவ்வளவாக ரன்கள் எடுக்காமலேயே சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார். அவர் டெஸ்ட் அணியில் விளையாட வேண்டுமென்றால் பரோடா அணிக்காக முன்வரிசையில் களம் இறங்கி விளையாட வேண்டும். அவர் முதல் பந்திலேயே சிக்சர் அடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

 

Mohamed:

This website uses cookies.