ராகுல் டிராவிட் எனக்கு கூறிய அறிவுரை இது தான்; உண்மையை உடைத்த யுஸ்வேந்திர சாஹல் !!

ரவி சாஸ்திரி தலைமையில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா அஜிங்கிய ரஹானே என சீனியர் வீரர்கள் கொண்ட அணி இலங்கையில் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. மறுபக்கம் ராகுல் டிராவிட் தலைமையில் ஷிகர் தவான் புவனேஸ்வர் குமார் ஹர்திக் பாண்டியா யுஸ்வேந்திர சஹால் தலைமையில் நிறைய இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இலங்கைக்கு எதிராக தற்போது விளையாட இருக்கிறது

164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணியின் ஒப்பற்ற வீரராக திகழ்ந்த ராகுல் டிராவிட் இதுவரையில் இந்தியா ஏ அணிக்கும் அதேபோல அண்டர் 19 அணைக்கும் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். மேலும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை அதிகாரியாகவும் செயல்பட்டு வந்தது நம் அனைவருக்கும் தெரியும்.

தற்போது முதல் முறையாக சர்வதேச தொடரில் இந்திய அணிக்கு அவர் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி எப்படி விளையாடப் போகிறது என்பதைக் காண அனைத்து ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் அவரது தலைமையின் கீழ் விளையாட இருக்கும் யுஸ்வேந்திர சஹால் ராகுல் டிராவிட் எனக்கு கூறிய அறிவுரையை தற்பொழுது வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதை நீ செய்ய வேண்டும்

ராகுல் டிராவிட் என்னிடம் வந்து உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை நீ தாராளமாக செய்யலாம் என்றும், அப்படி செய்யும் பொழுது முழு கவனத்துடன் அந்த செயலை மனதார செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் இந்த தொடரை எப்படி முக்கியமான தொடராக நீங்கள் பார்க்கிறீர்களோ அதேபோல இந்த தொடரை ஒரு முக்கியமான தொடராக நானும் பார்க்கிறேன் என்று ராகுல் டிராவிட் கூறியதாக தற்பொழுது யுஸ்வேந்திர சஹால் கூறியுள்ளார்.

வித்தியாசமான யுஸ்வேந்திர சஹாலை நீங்கள் பார்க்க போகிறீர்கள்

மேலும் பேசிய அவர் தனது ஆட்டத்தில் நிறைய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாகவும், கடினமான அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறி இருக்கிறார். இலங்கைக்கு எதிரான தொடரில் என்னுடைய புதிய பௌலிங் முறையை நீங்கள் அனைவரும் பார்க்க போகிறீர்கள் என்று யுஸ்வேந்திர சஹால் தற்பொழுது கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் இந்த தொடரில் எனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் நான் சரியாக பயன்படுத்த இருக்கிறேன். இது முடிந்த பின்னர் ஐபிஎல் தொடர் மற்றும் உலக கோப்பை டி20 தொடர் நடைபெற இருக்கிறது. அடுத்து அடுத்து முக்கியமான தொடர்கள் வர இருக்கின்ற நிலையில், தொடர்ந்து சிறப்பாக செயல்படும் வண்ணம் நான் என்னை மேம்படுத்திக் கொண்டு வருகிறேன் என்றும், இனி வரும் போட்டிகளில் ஒரு வித்தியாசமான யுஸ்வேந்திர சஹாலை நீங்கள் அனைவரும் பார்ப்பீர்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.