பிசிசிஐ நிவாகம் அண்மையில் அம்பயர்களுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு அளித்துள்ளது. பாகிஸ்தான் நிர்வாகம் தனது அம்பயர்களுக்கு அளித்த உயர்வு விட இது பல மடங்கு அதிகம்
பிசிசிஐ நிர்வாகம் ஒவ்வொரு வருடமும் விளையாட்டு வீரர்களுக்கு மற்றுமின்றி அம்பயர்களுக்கு ஊதிய மறு பரிசீலனை செய்யும். ஊதிய உயர்வும் அடிக்கடி வழங்கப்படும்.
இம்முறை ஊதிய உயர்வு கடந்த முறையை விட 100 சதவிகிதம் அதிடமாகும். இது முதல் தர அம்பயர்களுக்கு பொருந்தும். இரண்டாம் தர அம்பயர்களுக்கு சற்று குறைவாகும்.
இதுவரை, முதல் தர அம்பயர்களுக்கு ஒருநாள் சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. சம்பள உயர்விற்கு பிறகு, இனி வரும் நடப்பாண்டில் இது ஒரு நாளுக்கு 40 ஆயிரம் ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.
இரண்டாம் தர அம்பயர்களுக்கு புதிய சம்பளமாக 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்கு முன்பு அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
பாகிஸ்தான் அம்பயர்கள் சம்பளம்
பாகிஸ்தான் அம்பயர்களுக்கு ஒருநாள் சம்பளமாக ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் 17.5 சதவீதம் வரிக்கு போக மீதம் மட்டுமே வழங்கப்படும்.
முதல் தர அம்பயர்களுக்கு 5500 ரூபாய் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு 10 சதவீதம் வரியாக பிடிக்கப்படும். தற்போது பாகிஸ்தான் நிர்வாகம் சம்பள உயர்விற்கு ஆலோசித்து வருகிறது.
இனி, அணியில் இடம்பெறும் வீரர்களுக்கு தனி சம்பளமும், மீதமுள்ளவர்களுக்கு சற்று குறைவாகவும் வழங்கப்படும். வட்டார ஊதிய தொகை இனி நிறுத்தப்படும் எனவும் அறிவித்தது.