புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுக்கும் இலங்கை வீரர்கள் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு நீடிக்கும் தலைவலி! அப்படி என்ன சர்ச்சை?

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுக்கும் இலங்கை வீரர்கள் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு நீடிக்கும் தலைவலி

இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் சில வாரங்களுக்கு முன்பு ஒரு புதிய ஒப்பந்தத்தை வெளியிட்டது. அந்த ஒப்பந்தத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்களை 4 பிரிவுகளின் கீழ் பிரித்தி இருப்பதாகவும் அதன் அடிப்படையில் அவர்களுக்கு ஊதியம் வழங்க உள்ளதாகவும் கூறியிருந்தது.

அதில் வீரர்களின் உடற்பயிற்சி, ஒழுக்கம், சர்வதேச போட்டிகள் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் செயல்திறன், தலைமை பண்பு மற்றும் அணியின் ஒட்டுமொத்த மதிப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வீரர்களை நான்கு பிரிவுகளின் கீழ் பிரித்து இருந்தது.

அதில் வீரர்களுக்கு பெரிய உடன்பாடு இல்லை என தெரிய வந்தது. அதன் காரணமாக அவர்கள் அனைவரும் தற்போது வரை ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுத்து வருகின்றனர்.

இதுபற்றி விளக்கம் அளித்துள்ள இலங்கை வீரர்களின் வக்கீல் நிஷன் ப்ரேமதிரத்னே

இதுபற்றிய தற்பொழுது இலங்கை வீரர்கள் சார்பாக பேசி வரும் வக்கீல் நிஷன் ப்ரேமதிரத்னே கூறுகையில் வீரர்கள் அனைவரும் தற்போது இங்கிலாந்து தொடருக்கு தயாராகி வருகின்றனர். ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுத்ததால் அவர்கள் இலங்கை அணிக்காக விளையாட போவதில்லை என்று ஒருபோதும் கூறியது கிடையாது.

அவர்களுக்கு ஊதியத்தை தாண்டி இலங்கை அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்றுதான் எண்ணுகிறார்கள் என்று கூறியுள்ளார். இலங்கை வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் நிர்வாகம் அறிவித்துள்ள புதிய ஒப்பந்த அடிப்படையில் வீரர்களது ஊதியம்

இலங்கை நிர்வாகம் வீரர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்துள்ளது. அந்த ஒவ்வொரு பிரிவிலும், மேலும் மூன்று லெவல்களை வைத்துள்ளது.

கேடெகிரி A

லெவல் 1 – $100,000

லெவல் 2 – $80,000

லெவல் 3 – $70,000

கேடெகிரி B

லெவல் 1 – $65,000

லெவல் 2 – $60,000

லெவல் 3 – $55,000

கேடெகிரி C

லெவல் 1 – $50,000

லெவல் 2 – $45,000

லெவல் 3 – $40,000

கேடெகிரி D

லெவல் 1 – $35,000

லெவல் 2 – $30,000

லெவல் 3 – $25,000

இதில் தனஞ்செய டி சில்வா ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை பெரும் வீரராக முன்னணி வகிப்பார். அவரைத் தொடர்ந்து மற்ற அனைத்து வீரர்களும் 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் முதல் 80 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை பெறுவார்கள். ஆனால் வீரர்களுக்கு இவ்வாறு பொது வலைதளத்தில் அவர்களது ஊதியத்தை வெளியிட்டது சுத்தமாக பிடிக்கவில்லை என்றும், மேலும் இப்படி வெவ்வேறு வகையாக பிரித்து ஊதியத்தை வழங்குவதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்கிற செய்தி தெரியவந்துள்ளது.

Prabhu Soundar:

This website uses cookies.