இந்திய அணிக்கு முன்னாடி பாகிஸ்தான் டீம் ஒன்னுமே இல்ல… முன்னாள் இங்கிலாந்து வீரர் ஓபன் டாக் !!

இந்திய அணிக்கு முன்னாடி பாகிஸ்தான் டீம் ஒன்னுமே இல்ல… முன்னாள் இங்கிலாந்து வீரர் ஓபன் டாக்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வலுவான அணியாக இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து வீரரான டாமினிக் கார்க் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தேர்வு செய்யும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து அக்டோபர் 5ம் தேதி துவங்க உள்ளது.

இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது. அதே போல் அக்டோபர் 14ம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணியை, இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.

மற்ற அனைத்து போட்டிகளையும் விட இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி மீதே அதிகமான எதிர்பார்ப்பு நிலவும் என்பதால், முன்னாள் வீரர்கள் பலர் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் தற்போதே வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், உலகக்கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பேசிய முன்னாள் இங்கிலாந்து வீரரான டாமினிக் கிராக், பாகிஸ்தான் அணியை விட இந்திய அணி வலுவான அணியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து டாமினிக் கிராக் பேசுகையில், “இந்திய அணி அனைத்து வகையிலும் வலுவான அணியாக உள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணியோ தொடர்ச்சியாக பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் அணியின் சமீபத்திய விளையாட்டை வைத்து பார்த்தால் பாகிஸ்தான் அணியால் உலகக்கோப்பையை வெல்ல முடியாது என்றே பலருக்கும் தோன்றும், ஆனால் பாகிஸ்தான் அணியை எப்போதும் குறைத்து மதிப்பிட்டு விட கூடாது என்பதே உண்மை. இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில் என பலரும் தற்போது நல்ல பார்மில் உள்ளனர். தற்போதைய சூழ்நிலையை வைத்து பார்த்தால் பாகிஸ்தானை விட இந்திய அணி வலுவான அணி தான், ஆனால் பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட்டு விட கூடாது”என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.