இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனதற்கு தோனி தான் காரணமா..? உண்மையை வெளியிட்ட இர்பான் பதான் !!

தேவையில்லாமல் யாரையும் திட்டாதீர்கள் என்று ரசிகர் ஒருவருக்கு பாசத்துடன் இர்பான் பதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியை விளையாட துவங்கிய இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் தன் விளையாடிய காலத்தில் ஜாம்பவான்களாக திகழ்ந்த பேட்ஸ்மன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இர்ஃபான் பதான் ஆற்றிய பங்கு இன்றியமையாதது என்றே கூறலாம்.

ஆனால் இவர் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியோடு சர்வதேச அணியில் விளையாடுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, இதன் காரணமாக இவர் சர்வதேச தொடரிலிருந்து தன்னுடைய ஓய்வு அறிவித்துவிட்டார்.

29 டெஸ்ட்,24டி20மற்றும்120 ஒருநாள் போட்டிகளின் பங்கேற்று விளையாடிய இர்பான் தன்னுடைய 29 ஆவது வயதிலேயே ஓய்வை அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, இந்த ஓய்விர்க்கான காரணம்,தன்னுடைய 27 வயதிலிருந்து சர்வதேச இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

தற்போது லிஜென்ட் லீக் கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வரும் இர்ஃபான் பாதாணை பார்த்து ரசிகர் ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த லீகில் இர்பான் பதானை ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதெல்லாம், நான் மகேந்திர சிங் தோனி மற்றும் அணி நிர்வாகத்தை திட்டிக் கொண்டு உள்ளேன், இவர் தன்னுடைய கடைசி போட்டியை வெறும் 29 வயதில் விளையாடினார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை, ஏழாவது இடத்தில் களமிறங்கக்கூடிய சிறந்த வீரராக இருந்தபோதும், இவரை இந்திய அணி கழட்டி விட்டு விட்டு ஜடேஜா, ஸ்டுவர்ட் பின்னி போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது, எந்த ஒரு அணியாக இருந்தாலும் இர்பான் பதானை விட்டுக் கொடுத்திருக்காது என்று அந்தரசிகர் தெரிவித்திருந்தார்.

இதற்கு கமெண்ட் செய்த இர்ஃபான் பதான்,“ யார் மீதும் பழி போட வேண்டாம், உங்களுடைய அன்பிற்கு நன்றி” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.