நாங்கள் இன்னும் உலகக்கோப்பை வெல்லும் தகுதியுடன்தான் இருக்கிறோம் : டிம் பெய்ன்

தென் ஆப்பிரிக்காவிடம் முதலில் ஒயிட்வாஷ், பிறகு இங்கிலாந்துடன் ஒயிட் வாஷ், ஆனாலும் தங்கள் அணியை 2019 உலகக்கோப்பை சாம்பியன் தகுதியிலிருந்து நீக்கி விட வேண்டாம் என்று ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

“இன்னிங்ஸில் பெரும்பகுதி நல்ல லெந்தில் வீசி வாய்ப்புகளை உருவாக்கினோம். ஓரளவுக்கு நல்ல பேட்டிங், பவுலிங் திறமைகளைக் காட்டினோம் அணியில் திறமைகளுக்குப் பஞ்சமில்லை.

மிகவும் கசப்பான, ஏமாற்றமான தொடர் என்றாலும் குகையின் முனையில் சிறிதளவு வெளிச்சம் உள்ளது.

இந்த அணியில் இல்லாத சில வீர்ர்கள் உலகக்கோப்பையில் ஆடி வென்று கொடுத்துள்ளனர், அவர்களுக்குத் தெரியும் கோப்பையை வெல்வது என்றால் என்னவென்று.

இந்த அணி திசையறியாது செல்கிறது என்று கூறப்படுவதைக் கேட்டு வருகிறோம், ஆனால் எங்களிடம் சரியான திசை உள்ளது என்றே நான் நினைக்கிறேன்.

ஆனாலும் இப்போதைகு அடைய வேண்டிய இலக்கிலிருந்து சற்று தொலைவில் இருக்கிறோம். எங்களது சிறந்த அணியை எப்போது களமிறக்குவோம் என்பது எங்களுக்குத் தெரியும், நாங்கள் எங்களது சிறந்த கிரிக்கெட்டை ஆடும்போது அனைத்தும் அதனதன் இடத்தில் வந்து நிற்கும், எனவே எங்களை 2019 உலகக்கோப்பை சாம்பியன் தகுதியிலிருந்து நீக்கி விட வேண்டாம் என்று கூறிக்கொள்கிறேன்” இவ்வாறு கூறினார் டிம் பெய்ன்.

ஜோஸ் பட்லரின் பொறுப்பான சதத்தால் மான்செஸ்டரில் நேற்று நடந்த 5-வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 5-0 என்று ‘வொயிட்வாஷ்’ செய்தது இங்கிலாந்து அணி.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் 140 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணியிடம் முதல்முறையாக ஒருநாள் போட்டித் தொடரில் அனைத்துப் போட்டியில் தோல்வி அடைந்து (க்ளீன்ஸ்வீப்) தொடரை இழந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் இந்தத் தோல்வி மிகப்பெரிய கரும்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.

சதம் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்ற ஜோஸ்பட்லருக்கு, இந்தத் தொடரின் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என்று வென்றுவிட்டதால் என்னவோ தொடக்க வீரர்கள் முதல் நடுவரிசை வீரர்கள் வரை மிகவும் சொதப்பலாக, அக்கறையின்றி பேட்டிங் செய்தனர். கடந்த போட்டிகளில் சதம் அடித்த ஜேஸன் ராய், ஹேல்ஸ், பேர்ஸ்டோ ஆகியோர் இந்தப் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ஏன் என்று தெரியவில்லை.

இங்கிலாந்து அணியில் ஜோஸ்பட்லரின் 110 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோராகும். அடுத்த அதிகபட்ச ஸ்கோர் என்பது ரஷித்,ஹேல்ஸ் சேர்த்த 20 ரன்கள் என்றால் மற்ற வீரர்களின் பேட்டிங் திறமையின் மோசமானநிலையை அறியலாம்.

Editor:

This website uses cookies.