எல்லாமே நல்ல போயிடுட்டு இருக்கு… ஆனா இப்ப இத செஞ்சு மொத்தமா எல்லாத்தையும் கெடுத்துக்க போறீங்க; இந்திய அணியை எச்சரித்த வாசிம் அக்ரம் !!

எல்லாமே நல்ல போயிடுட்டு இருக்கு… ஆனா இப்ப இத செஞ்சு மொத்தமா எல்லாத்தையும் கெடுத்துக்க போறீங்க; இந்திய அணியை எச்சரித்த வாசிம் அக்ரம்

உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது தேவையற்றது என முன்னாள் பாகிஸ்தான் வீரரான வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற விண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு அயர்லாந்து அணியுடனான டி.20 தொடரில் பங்கேற்ற இந்திய அணி, அடுத்ததாக இலங்கை சென்று ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது.

இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தையும் வென்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த மாத இறுதியில் துவங்க இருக்கும் நிலையில், அதற்கு முன் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 22,24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரே தேவையற்றது என முன்னாள் பாகிஸ்தான் வீரரான வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

என்னை பொறுத்தவரையில் உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பது தேவையற்றது. இதனால் இந்திய வீரர்களுக்கு ஓய்வே கிடைக்காத நிலை ஏற்படும். தற்போது தான் ஆசிய கோப்பை  தொடரை நிறைவு செய்துள்ள இந்திய அணி, அடுத்த சில தினங்களில் ஆஸ்திரேலிய அணியுடனான தொடரையும், அதன்பின் உலகக்கோப்பையும் உலகக்கோப்பையை தொடரில் பங்கேற்க உள்ளதால் வீரர்களுக்கு சோர்வு தான் ஏற்படும். கடந்த இரண்டு மாதங்களாக இந்திய அணி தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வருகிறது. உலகக்கோப்பையில் இந்திய அணி வெவ்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணம் செய்யவே ஒருநாள் ஆகிவிடும். இதனால் உலகக்கோப்பையில் ஆற்றலுடன் இருப்பது முக்கியம். இந்த நேரம் ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவது ஏன்? என தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.