கோஹ்லி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்த மாட்டார்; வினோத் ராய்
இந்திய கிரிக்கெட் வாரியத்தில் சீர்த்திருத்தங்கள் கொண்டு வர லோதா தலைமையிலான குழு பல்வேறு கருத்துக்களை உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது. இதில் பெரும்பாலானவற்றை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பிசிசிஐ நிர்வாகிகள் லோதா பரிந்துரைகளை செயல்படுத்த தாமதம் செய்தார்கள். இதனால் வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழு ஒன்றை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த குழுவின் தலைவரான வினோத் ராய்க்கு தெரியாமல் பிசிசிஐ-யில் எந்த செயலும் நடக்காத நிலை உள்ளது.
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி கேப்டன் பதவியை அளவுக் கடந்து பயன்படுத்தியதாக நினைக்கவில்லை என்று வினோத் ராய் கூறியுள்ளார்.
இதுகுறித்து வினோத் ராய் கூறுகையில் ‘‘எந்தவொரு கோப்டனாக இருந்தாலும் அணியில் அவரது தாக்கும் குறிப்பிட்ட அளவிற்கு இருக்கும். ஒரு குறிப்பிட்ட அளவிலான தனிப்பட்ட அளவிற்கு செயல்பட நான் ஆதரவாகத்தான் இருப்பேன். எல்லாவற்றிற்கும் பிறகு அளவு எல்லையை கடப்பது உண்டு.
ஆனால், விராட் கோலி கேப்டன் பதவியை சந்தோசமாக அனுபவிக்க, தனது பதவியை அளவுக் கடந்து பயன்படுத்தியதாக எந்தவொரு வீரரும் புகார் கூறியது இல்லை. என்னுடைய தனிப்பட்ட முறையில், விராட் கோலியின் நடவடிக்கை முற்றிலும் சரியாக இருக்கிறது. எந்தவொரு விஷயத்திற்காகவும் எனக்கு அழுத்தம் கொடுத்தது கிடையாது. மேலும் அணி நிர்வாகம், தேர்வாளர்கள் யாராக இருந்தாலும் அவர் பற்றி எந்தவொரு புகாரும் அளித்தது கிடையாது’’ என்றார்.