டெஸ்ட் அணியில் இவர எடுக்காதது குழப்பமா இருக்குது ! இந்திய வீரருக்கு சப்போர்ட் செய்த டோடா கணேஷ் !
14வது ஐபிஎல் சீசன் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளனர். இந்த சீசனில் இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.
இன்னும் 30 போட்டிகள் வரை மீதம் இருக்கிறது. இதனால் மீதமுள்ள போட்டிகளை எல்லாம் எப்போது ? எங்கு ? நடத்தப்படும் என்று கேள்வி எழுந்தது. இவ்வாறு ஐபிஎல் தொடரை பாதியிலேயே நிறுத்தப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தற்பொழுது ஐபிஎல் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அனைத்து இந்திய ரசிகர்களும் அடுத்து வரவுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஜூன் 18-ஆம் தேதி தொடங்கப்பட்டு ஜூன் 22ஆம் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டனில் நடக்க உள்ளது. இந்தநிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அந்த அணியில் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பிரித்வி ஷா போன்ற பல முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை. காயம் காரணமாக ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறிய ரவிந்திர ஜடேஜா இந்த மீண்டும் என்டரி கொடுதாதிருக்கிறார்.
இதையடுத்து தற்போது காயத்தில் உள்ள கே எல் ராகுல் மற்றும் கொரோனாவில் பாதிக்கப்பட்டு உள்ள விருதிமான் சாஹா உடற்தகுதி நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், இந்திய அணியில் இவர்களை ஏன் தேர்வு செய்யவில்லை என்று அனைவரும் ஒவ்வொரு வீரரை கைகாட்டி இருக்கின்றனர். அந்தவகையில் ஜெய்தேவ் உன்டகட்டை ஏன் தேர்வு செய்யவில்லை என்பது குழப்பாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் டோடா கணேஷ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில் “இந்திய டெஸ்ட் சேர ஜெய்தேவ் வேறு என்ன செய்யவேண்டும். ஒவ்வொரு வருடமும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவரை மீண்டும் மீண்டும் புறக்கணிப்பது குழப்பமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
ஜெய்தேவ் உனட்கட் 2011ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட் அணியில் அறிமுகமானார். அந்த போட்டியில் 26 ஓவர்கள் வீசிய இவர் விக்கெட்கள் கிடைக்கம்மால் இருந்தார். அந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து 7 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.