என்னா மனுசன் சார் இவரு…. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியையே நிராகரித்த ராகுல் டிராவிட் !!

என்னா மனுசன் சார் இவரு…. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியையே நிராகரித்த ராகுல் டிராவிட்

தன்னை தேடிவந்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் நிராகரித்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான அணில் கும்ப்ளே, விராட் கோஹ்லியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான போட்டியில் சேவாக் போன்ற வீரர்கள் போட்டியிட்டிருந்தாலும், பி.சி.சி.ஐ., நிர்வாகிகளோ ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளராக நியமிக்கலாம் என திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பி.சி.சி.ஐ., நிர்வாகிகளின் கோரிக்கையை ராகுல் டிராவிட் நிராகரித்து விட்டதாக வினோத் ராய் தற்பொழுது தெரிவித்துள்ளார்.

பி.சி.சி.ஐ., தலைவரான வினோத் ராய் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது;

அனில் கும்ப்ளேவிற்கு பிறகு ராகுல் டிராவிட்டை தான் பயிற்சியாளராக்க நினைத்தோம். ஆனால் ராகுல் டிராவிட் எங்கள் கோரிக்கையை நிராகரித்து விட்டார். அதற்கு அவர் கூறிய காரணம், பயிற்சியாளராக செயல்பட்டால் தன்னால் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாது என்பது தான். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளதாக அவர்களுடன் தனது நேரத்தை செலவிட விரும்புவதாக ராகுல் டிராவிட் எங்களிடம் ஓபனாக தெரிவித்து விட்டார்.

ராகுல் டிராவிட் சொல்வதில் நியாயம் இருந்ததால் நாங்களும் அவரை வற்புறுத்தாமல் ஒப்புக்கொண்டோம். இருந்தாலும் தொடர்ந்து அவரிடம் பேசிய பிறகு தான் இளம் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஒப்புக்கொண்டார்” என்று வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.