என்ன அப்போவே அப்படி வளர்த்துட்டாங்க! இல்லைன்னா சம்பவம் பண்ணி இருக்கலாம்! தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எங்கு தவறு நடந்தது என்பதைப் பற்றி பேசிய ராகுல் டிராவிட்!
இந்திய கிரிக்கெட் அணிக்காக 1999ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுகமானவர் ராகுல் டிராவிட் .இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்பட்டவர். இந்திய அணிக்காக 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 ஆயிரத்து 288 ரன்கள் குவித்துள்ளார் .
இதன் சராசரி 52.31 .மேலும் 36 சதங்கள் விளாசியுள்ளார். தற்போது 47 வயதாகும் அவர் இந்திய இளைஞர் அணிகளுக்கான பயிற்சியாளராக இருக்கிறார். மேலும் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகடமியில் இயக்குனராகவும் பதவி வகித்து வருகிறார். இந்திய கிரிக்கெட்டின் டெஸ்ட் தடுப்புச் சுவராக விளங்கிய இவர் டெஸ்ட் போட்டிகளுக்கென்றே வேதனை தாரை வார்த்தவர்.
இந்நிலையில் தான் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே நன்றாக ஆடினார் என்பது பற்றி பேசியுள்ளார் ராகுல் டிராவிட் .அவர் கூறுகையில்..
என்னை சிறுவயதிலேயே இருந்தே டெஸ்ட் போட்டிகளுக்கு என்றே வளர்த்தார்கள். பந்தை தூக்கி அடிக்க கூடாது தரையோடு தரையாக ஒரு பவுண்டரி விலாசம் வேண்டும் டெஸ்ட் வீரர்கள் கீழே இருக்கும் பிரத்தியேக பயிற்சிகளைக் பயிற்சிகளை மட்டுமே எனக்கு அளித்தார்கள்.
ஒருநாள் போட்டிகளுக்கான திறமைகள் இருந்தும் அதனை செய்ய முடியுமா என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. 1998 ஆம் ஆண்டு அணியிலிருந்து நீக்கப்பட்ட போது அதனை உணர்ந்தேந். கிரிக்கெட் நமக்கு சரியாக வருமா என்றெல்லாம் யோசிக்க துவங்கிவிட்டேன். நான் எப்போதும் பாதுகாப்பானாக உணர்ந்து விடவில்லை. இதனை வைத்துதான் இந்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களிடம் இதனை நான் போதித்து வருகிறேன் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.