ட்ரெஸ்சிங் ரூமின் சூழல் தான் சென்னையின் வெற்றியை தொடர வைக்கிறது – தல தோனி பெருமிதம்

ஓய்வு அறையில் வீரர்களிடையே இருக்கும் ஒழுங்கும், நட்புமே அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிக்கு உதவுகிறது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி கூறினார்.
2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு களம் கண்டுள்ள சென்னை அணி, நடப்பு 11-ஆவது சீசனில் முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், மும்பையில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த தோனி கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த அணியாக இருந்து வருகிறோம். இதற்கு ஓய்வு அறையில் வீரர்களின் ஒழுங்கும், நட்புமே முக்கிய காரணங்களாகும். வீரர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களின் ஆதரவு இல்லாமல் இந்த வெற்றிகள் சாத்தியமில்லை. ஓய்வு அறை சூழல் சாதகமானதாக இல்லாவிட்டால், வீரர்கள் திசைக்கு ஒருவராக சென்றுவிடுவார்கள்.
வெற்றி எப்போதுமே சந்தோஷம் அளிக்கும் ஒன்றுதான். பிளே ஆஃப் ஆட்டத்தில் டூ பிளெஸ்ஸிஸின் ஆட்டம், அவரது அனுபவத்தை வெளிப்படுத்தியது. அதிகபடியான ஆட்டங்களில் ஆடாமல் அது சாத்தியமில்லை. எனினும், எப்போதுமே எதற்கும் தன்னை தயார் செய்துகொள்ள வேண்டும்.
அந்த வகையில் தான் அனுபவம் கிடைக்கும். அதை டூ பிளெஸ்ஸிஸ் சிறப்பாகச் செய்துள்ளார்.
ஒருவேளை நாங்கள் தோல்வி அடைந்திருந்தால், அடுத்து ஒரு வாய்ப்பு இருந்திருக்கும். ஹைதராபாத் அணியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்கள். புவனேஷ்வர் குமார் அருமையாக பந்துவீசினார். அடுத்ததாக ரஷீத் கான் தகுந்த ஆதரவளித்தார். நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் நெருக்கடிக்கு உள்ளானோம்.

Hyderabad: Chennai Super Kings (CSK) Captain M S Dhoni celebrates with team mates after winning the match against Sunrisers Hyderabad during Indian Premier League (IPL) T 20 cricket match in Hyderabad on Sunday. PTI Photo Ashok Bhaumik(PTI4_22_2018_000161B)

அதுபோன்ற ஒரு ஆட்டத்தில் வென்றது சிறப்பான ஒன்று. அதில் நாங்கள் எந்த வகையில் எங்களை மேம்படுத்திக் கொண்டோம் என்பது முக்கியமாகும். சென்னை அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒவ்வொரு சூழலிலும், ஒவ்வொருவராக களமிறக்கி வருகிறேன். ஏனெனில், எந்த மாதிரியான சூழலில் எவரால் அணிக்கு எவ்வாறு பங்களிக்க இயலும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோனி கூறினார்.

Editor:

This website uses cookies.