போட்டியின் போது ஆடுகளத்தில் விராட் கோலி காட்டும் ஆக்ரொஷமும், தோனி காட்டும் அந்த ஐஸ் கூல் அற்புத பண்புகளும் மைதானத்திற்குள் மட்டுமே. நான் கேமராவில், டீவியில் பார்த்து இந்திய கிரிக்கெட் வீரர் ஒவ்வொருவரும் இப்படித்தான் என நிர்மானித்து வைத்திருப்போம். ஆனால், அதையும் தாண்டி கேம்ராவில் காட்டாத அவர்களிடம் பல குரும்புகளும், சேட்டைகளும் ஒளிந்து கிடக்கின்றன.
அதுவும் குறிப்பாக தோனி, யுவராஜ் சிங் ஆகியோர் ஆடுகளத்திற்கு வெளியே மிகவும் குறும்பு பிடித்த மனிதர்களாக இருந்திருக்கின்றனர். பல நேரத்தில் அணிக்கு புதிதாக வரும் வீரர்களை சீனியர் வீரர்கள் பிரான்க் செய்து விளையாடுவர்கள். தோனி கூட இப்படி ஒரு முறை பிரான்க் செய்ப்பட்டிருக்கிறார்.
அப்படியான சிறந்த 9 கலாட்டாக்களை நாங்கள் உங்களுக்காக தொகுத்துளோம். அவற்றைத் தற்போது காண்போம்.
1. ஆரம்ப காலத்தில் தோனியை சீண்டிய யுவராஜ் சிங்
தோனி இந்தியாவிற்கான் அறிமுகப் போட்டியில் 2004ல் தான் விளையாடினார். ஆனால், அதற்கு முன்பே அணியில் சற்று தெரிந்த முகம் யுவராஜ் சிங். 2000த்தில் தனது 19 வயதிலேயே இந்திய அணிக்கு தேர்வாகிவிட்டார் யுவராஜ். அப்போதிலிருந்து அவர் நல்ல ஃபீல்டிங் மற்றும் அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் போனவர். தோனி புதிதாக அணியில் சேர்ந்த போது தோனியை ‘பிகாரி’ என அழைத்து கிண்டல் செய்வாராம். ஏனெனில் ஜார்கண்ட் மாநிலம் 1999 வரை பிகார் மாநிலத்துடன் தான் இருந்தது. இதனால் அவரை பிகார் என்று அழைத்து கிண்டல் செய்வார்.
மேலும், தோனி நன்றாக அதிரடியக ஆடத் துவங்கியதும், ஃபோர், சிக்சர் எளிதாக அடிக்கலாம். ஆனால், ஒரு ஆட்டத்தை வெற்றி பெற வைக்கும் மேட்ச் வின்னிங் நாக் ஆடினால் தான் அவர் ஒரு நல்ல வீரர் என யுவராஜ் தோனியை சீண்டியிருக்கிறார். பின்னர் தோனி அதனையும் செய்து காட்ட, மேட்ச் வின்னிங் நாக் ஆடினால் மட்டும் ஒரு நல்ல வீரர் ஆகி விட முடியாது டெஸ்ட் போட்டிகளில் ஆடினால் மட்டும் தான் ஒரு வீரரின் மதிப்பை காட்டும் என கோபத்துடன் கூறியிருக்கிறார் யுவராஜ் சிங். அதற்கு, ‘அது நல்லது தான், எனக்கு ஒன்று கூறுங்கள், ஏன் எப்போதும் நீங்கள் கோபத்துடன் உள்ளீர்கள்’ என யுவராஜ் சிங்கை பார்த்து கேட்டிருக்கிறார் தோனி’ உடனியாக சிரித்துவிட்ட யுவராஜ் சிங், கட்டிபிடித்து தோனியை வாழ்த்தியிருக்கிறார். அப்போதிலிருந்து இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டனர்.