இலங்கைக்கு எதிரான டெஸ்டில் டு பிளெசிஸ்க்கு ஏற்பட்ட சோகம் ! ஒரு ரன்னில் தவறவிட்ட சாதனை !
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரை தொடர்ந்து தற்போது ஸ்ரீலங்கா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.
தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த டிசம்பர் 26 ஆம் தேதியில் இருந்து செஞ்சூரியனில் நடைபெற்று வந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 396 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சண்டிமால் 85 ரன்கள், தண்ஜயா டி சில்வா 79 ரன்கள் மற்றும் தாசுன் ஷானகா 66 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். தென்னாபிரிக்க பந்துவீச்சாளர் லூத்தோ சிபாம்லா 4 விக்கெட்டுகளும் வியான் முல்டர் 3 விக்கெட்டுகளும் பெற்றிருந்தனர்.
இதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது நாள் முடிவில் 4 விக்கெட் களுக்கு முன் 317 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து அடுத்த நாள் தென்னாபிரிக்க அணி மீண்டும் சிறப்பாக விளையாடி 304 ரன்கள் சேர்த்து மொத்தம் 621 என்ற மிகப்பெரிய இழக்கை தென்னாபிரிக்க அணி குவித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 225 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா சார்பாக டுப்லஸ்ஸிஸ் 199 ரன்கள் அடித்தார். ஒரு இதன் காரணமாக தனது இரட்டை சதத்தை தவறவிட்டார் டுப்லஸ்ஸிஸ். இதைத் தொடர்ந்து டீன் எல்கர் 95 ரன்கள், பவுமா 71 ரன்கள், கேஷவ் மகராஜ் 73 ரன்கள் குவித்திருந்தனர்.
செஞ்சூரியன் மைதானத்தில் அடித்த அதிகபட்ச ரன்களாக இது பேசப்படுகிறது. அதன்பின் தனது இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 180 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றியையும் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியையும் பதிவு செய்துள்ளது. எடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதி தீ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது
இதில் தென் ஆப்பிரிக்கா சார்பாக டுப்லஸ்ஸிஸ் 199 ரன்கள் அடித்தார். ஆனால் இந்த போட்டியில் டு பிளெசிஸ் ஒரு ரன்னில் தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை தவறவிட்டார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.