இந்திய அணியில் நீக்கினால் என்ன இந்த தொடரில் நான் விளையாடுவேன் ; புது ஐடியாவுடன் புஜாரா..
இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர் பு, தற்பொழுது இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கவுண்டி கிரிக்கெட்டில் புலி, இங்கிலாந்து மைதானம் அத்துபடி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு மரண அடி என்ற எதுகை மோனை பில்டப்புடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் அனுபவ வீரர் புஜாரா, மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நெட்டிசன்களின் செல்லப் பிள்ளையாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
இது ஒரு புறம் இருந்தாலும் வயது முதிர்வு காரணமாகவும்,மோசமான பார்ம் மற்றும் இள வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதாலும் இவரை நிச்சயம் அடுத்த டெஸ்ட் போட்டியில் அணியில் சேர்க்க மாட்டார்கள் என முன்னாள் வீரர்கள் பல தெரிவித்து வருகின்றனர். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை புஜாராவின் கடைசி போட்டியாக இருக்கும் என்று கிரிக்கெட் வட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் நூறு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் புஜாராவிற்கு இருப்பதால் அவர் மீண்டும் தன்னுடைய இழந்த பார்மை மீட்டெடுத்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ஹர்பஜன்சிங் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் புஜராவிர்க்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்ட புஜாரா தற்பொழுது இந்தியாவில் நடக்கும் உள்ளூர் போட்டியான துலிப் டிராபியில் வெஸ்ட் ஜோன் அணிக்காக விளையாட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அவருடன் சேர்த்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சூரியகுமார் யாதவ் மற்றும் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களும் துலிப் டிராபியில் பங்கேற்று விளையாட உள்ளதாக தெரிகிறது. இதனால் உள்ளூர் போட்டியான துளிப் டிராபியின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.