சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார் டூவைன் பிராவோ; ஓய்வு பெறும் தேதி அறிவிப்பு !!

இந்த 2021 உலக கோப்பை தொடருக்குப் பின் சர்வதேச டி20 தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஓய்வு அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கி, மூன்று விதமான தொடர்களிலும் சேர்த்து 294 போட்டிகளில் விளையாடிய பிராவோ பல முறை வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்ந்திருக்கிறார்.

மேலும் இவர் மூன்றுவிதமான சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 6413 ரன்கலையும் 363 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் டுவைன் பிராவோ 2018ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவிக்கிறேன் என்று அறிவித்தார்,பின் டி20 தொடரை தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளிலும் அறிவிப்பதாக அந்த அறிவிப்பை மாற்றி மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் 2021 உலக கோப்பை தொடரில் விளையாடி வரும் பிராவோ சர்வதேச டி20 தொடரில் இருந்து ஓய்வு அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது ஓய்வு குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பொழுது டுவைன் பிராவோ பேசியதாவது, தற்பொழுது என்னுடைய நேரம் நெருங்கி விட்டது என்று நினைக்கிறேன் நான் வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த 18 ஆண்டுகள் மிக சிறந்த முறையில் விளையாடி உள்ளேன், அதில் சில ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் தற்போது அந்த நிகழ்வுகளை எல்லாம் திரும்பி பார்க்கும் பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விளையாடியது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஐசிசி டிராபியில் வெற்றி பெறும்போது நான் இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது, குறிப்பாக எனது கேப்டன் டேரன்சமியுடன் 2 உலக கோப்பை தொடரில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களோடு விளையாடியது மேலும் உலகளவில் பெயர் சொல்லும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டது ஆனந்தமாக உள்ளது என்று பிராவோ தெரிவித்திருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பிராவோ உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ரசிகர்களை கொண்ட வீரராக திகழ்ந்து வருகிறார். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் டுவைன் பிராவோ தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.