மனுஷனே இல்லைங்க… நாங்கள் ஜெயிச்சும் எங்களுக்கு சந்தோசம் இல்லை! இந்த கொல்கத்தா வீரரால் பயந்துவிட்டேன் – புலம்பித்தள்ளிய ரவி பிஸ்னாய்!

ரிங்கு சிங் ஆடிய ஆட்டத்தைக் கண்டு மிரண்டுவிட்டதாக போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ரவி பிஸ்னாய் கூறியுள்ளார்.

பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் மிக முக்கியமான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 176 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 49 ரன்கள் அடித்தார்.

177 ரன்கள் இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஜேசன் ராய் 45 ரன்கள் அடித்தார். வெங்கடேஷ் ஐயர் 24 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார் இவர்கள் இருவரும் நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்து வெளியேறினர்.

பின்னர் வந்த வீரர்கள் மிகவும் சொதப்பியதால கிட்டத்தட்ட கையைவிட்டு சென்ற போட்டியை இழுத்துப் பிடித்தார் ரிங்கு சிங். இவர் மீண்டும் ஒருமுறை கொல்கத்தா அணிக்காக பினிஷிங் ரோலில் அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார் ரிங்கு சிங்.

கடைசி மூன்று ஓவர்களில் கொல்கத்தா அணி வெற்றிபெற 51 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இருந்தது. அப்போதே முடிந்துவிட்டது என பலரும் கருதினர். உள்ளே நின்ற ரிங்கு சிங், கடைசி ஓவர் கடைசி பந்துவரை லக்னோ அணிக்கு திகிலை கொடுத்தார்.

துரதிஷ்டவசமாக ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது. போட்டி முடிந்த பிறகு இந்த வெற்றி குறித்து பேட்டி அளித்த லக்னோ சுழல்பந்து வீச்சாளர் ரவி பிஸ்னாய் கூறுகையில்,

“வெற்றி பெற்றது ஒருவகையில் மகிழ்ச்சி அளித்தாலும், ரிங்கு சிங் விளையாடிய விதம் கதிகலங்க வைத்தது. ஒவ்வொரு பந்தையும் அவர் எதிர்கொள்ளும்பொழுது ஆட்டம் கைவிட்டு போய்விட்டதோ என நினைக்க வைத்தது. இந்த சீசன் முழுவதும் ரிங்கு சிங் விளையாடிய விதம் அசாத்தியமாக இருந்திருக்கிறது. வெற்றி பெற்றும் சந்தோஷம் இல்லாத நிலைக்கு எங்களை வைத்துவிட்டார்.

இந்த பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தேன். ஸ்பின்னர்களுக்கு நன்றாகவே எடுபட்டது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஸ்கிட் ஆகவில்லை. கடைசியில் வெற்றியில் முடித்துவிட்டோம். பிளே-ஆப் சுற்றில் நன்றாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்கும் முனைப்புடன் இருக்கிறோம்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.