இந்தியா இந்த ஆண்டு இறுதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வைத்து மூன்று வார இடைவெளியில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் நடக்க இருக்கின்றன. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வெகு சீக்கிரமாக முடிக்கப்பட்டால் ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு மிக எளிதாக இருக்கும்.
எனவே பிசிசிஐ இங்கிலாந்து அணி நிர்வாகத்திடம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை சற்று முன்கூட்டியே முடித்துக்கொள்ள விண்ணப்பம் எழுதி இருந்தது. அதை இங்கிலாந்து நிர்வாகம் மருத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதை பற்றி தற்பொழுது இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்க் பட்ச்சர் தனது தரப்பு கருத்தை கூறியுள்ளார்.
இங்கிலாந்து ஒப்புக் கொண்டிருக்க வேண்டும்
இந்தியா போல ஒரு கிரிக்கெட் நிர்வாகம் இப்படி வந்து தாழ்மையாக தங்களது விண்ணப்பத்தை தெரிவிக்கும் பொழுது அவர்களது விண்ணப்பத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதேசமயம் டெஸ்ட் போட்டிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்வதற்கு சரிக்கு சமமாக, இந்தியாவில் உள்ள விராட் கோலி, மகேந்திர சிங் தோனி போன்ற வீரர்களை இங்கிலாந்தில் நடக்க இருக்கும் 100 தொடரில் விளையாட பதிலுக்கு இந்திய நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு இருந்திருக்க வேண்டும். அதை இங்கிலாந்து நிர்வாகம் செய்யத் தவறி உள்ளதாக அவர் கூறியுள்ளார். அவர்கள் போன்ற வீரர்கள் விளையாடினால் நிச்சயமாக இந்த தொடருக்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
100 தொடர் 8 அணி மற்றும் 8 பெண்கள் அணி கொண்டு நடத்தப்படும் தொடராகும். இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மாதத்தில் வைத்து இந்த தொடர் நடக்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் பிபிசி மற்றும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனல்களில் ஒளிபரப்பாகும்.