பாகிஸ்தான் சூப்பர் லீக் 2019 சீசனில் 8 போட்டிகள் பாகிஸ்தானில் நடக்கிறது

பாகிஸ்தான் சூப்பர் லீக் 2019 சீசனில் 8 போட்டிகள் பாகிஸ்தான் மண்ணில் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த 2016-ல் இருந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. 2009-ம் ஆண்டிற்குப் பிறகு வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருவதால் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது.

umar in psl with darren sammy after matchபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த 2016-ல் இருந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. 2009-ம் ஆண்டிற்குப் பிறகு வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருவதால் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது.

பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. 2017 சீசனில் இறுதிப் போட்டியை மட்டும் லாகூரில் நடத்தியது.

கடந்த சீசனில் இரண்டு பிளேஆஃப்ஸ் போட்டியை லாகூரிலும், இறுதிப் போட்டியை கராச்சியிலும் நடத்தியது. இந்த முறை 8 போட்டிகளை பாகிஸ்தான் மண்ணில் நடத்துகிறது. இதுதொடர்பாக அணி உரிமையாளர்களிடம் பாகிஸதான் கிரிக்கெட் வாரியம் பேசியுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் 2019 சீசன் பிப்ரவரி 14-ந்தேதி துபாயில் தொடங்கு மார்ச் 17-ந்தேதி வரை நடக்கிறது. வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் முடிவடைந்து அதன்பின் வீரர்கள் ஏலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vignesh G:

This website uses cookies.