இந்திய அணியின் பயிற்சியாளராக என்னென்ன தகுதிகள் வேண்டும் என பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
உலக கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் பௌலிங் பயிற்சியாளர் என அனைவரின் பணி காலமும் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் உடனடியாக மேற்கு இந்திய தீவுகள் அணியுடனான தொடர் வரவிருப்பதால் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பணி காலம் மட்டும் 48 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை 30ம் தேதி வரை பதவிக்கான விண்ணப்பங்கள் அனுப்பலாம் என பிசிசிஐ காலக்கெடு விதித்துள்ளது. மேலும், விண்ணப்பிப்பதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் எனவும் வெளியிடப்பட்டுள்ளது. அவைகளாவன,
- முதல் அடிப்படை தகுதியாக 60 வயதிற்கும் குறைவானவராக இருக்க வேண்டும்.
- டெஸ்ட் போட்டிகளில் ஆடும் நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- ஐசிசியின் முன்னணி அணிகள், அசோசியேட் அணிகள் அல்லது ஏ அணி அல்லது ஐபிஎல் இவற்றின் ஏதேனும் ஒன்றில் குறைந்த பட்சம் மூன்று வருடங்களாவது பணிபுரிந்திருக்க வேண்டும்.
- தலைமை பயிற்சியாளருக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 ஒருநாள் போட்டிகளிலாவது ஆடியிருக்க வேண்டும்.
- பேட்டிங் மற்றும் பௌலிங் பயிற்சியாளர்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 10 டெஸ்ட் போட்டிகள் அல்லது 25 ஒருநாள் போட்டிகளிலாவது விளையாடி இருக்க வேண்டும்.
The second Test cricket match between India and Sri Lanka starts in Colombo on August 3. / AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)
தற்போது பதவியில் இருந்து வரும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் பரத் ஸ்ரீதர் ஆகியோரும் இப்பதவிக்கு வர விரும்பினால், விண்ணப்பம் செய்யலாம். அவர்களுக்கு ஆரம்பநிலை தேர்வுகள் எதுவும் நடத்தப்படாது. நேரடியாக இறுதித்தேர்வு இருக்கு அனுப்பப்படுவார்கள் என்பதையும் வீசி செய்தியை வெளியிட்டுள்ளது.