தகரத்தை வச்சி தங்கமா மாத்துறதுல மும்பை இந்தியன்ஸை அடிச்சுக்க ஆளே இல்ல.. 5 ரன்னுக்கு 5 விக்கெட் எடுத்து.. லக்னோவை மிரளவிட்ட மும்பை வீரர் ஆகாஷ் மத்வால் – ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்!

பந்துவீச்சில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, லக்னோ அணியை 101 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய முக்கிய பங்காற்றினார் ஆகாஷ் மத்வால். மும்பை அணி 81 ரன்கள் வித்தியசத்தில் அபார வெற்றி! இவருக்கு ட்விட்டரில் பாராட்டுக்கள் குவிந்துள்ளன.

2023 ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் முடிவில் புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்கள் பிடித்த லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே-ஆப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் மோதின.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. சிறப்பான துவக்கம் அவர்களுக்கு அமையவில்லை. இருப்பினும் மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ்(33) மற்றும் கேமரூன் கிரீன்(41) இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து மும்பை இந்தியன்ஸ் அணி நல்ல ஸ்கோர் எட்ட உதவினர்.

சூரியகுமார் மற்றும் கிரீன் விக்கெட்டை எடுத்த பிறகு லக்னோ அணி மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது. கடைசியில் வந்த நேஹல் வதேரா(23) அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. மேயர்ஸ்(18), மான்கட்(3) இருவரும் சொற்பரன்களுக்கு ஆட்டமிழந்தனர். க்ருனால் பாண்டியா 8 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேற லக்னோ அணி தடுமாறியது.

மார்கஸ் ஸ்டாய்னிஸ் நன்றாக விளையாடி லக்னோ அணிக்கு உறுதுணையாக இருந்தார். அப்போது பதோனி மற்றும் பூரான் இருவரின் கிரிக்கெட்டையும் ஒரே ஓவரில் தூக்கி மும்பை இந்தியன்ஸ் அணையை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார் இன்னும் வேகப்பந்து பேச்சாளர் ஆகாஷ் மத்வால்.

அதன் பிறகு ரன் ஓடும்பொழுது, தீபக் ஹூடா மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இருவருக்கும் இடையே நடந்த சலசலப்பில் தவறு நேர்ந்து நம்பிக்கை கொடுத்துவந்த ஸ்டாய்னிஸ் ரன் அவுட் ஆனார். இவர் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 15 ரன்களுக்கு தீபக் ஹூடாவும் ரன் அவுட் மூலம் வெளியேறினார்.

இறுதியில் 16.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது லக்னோ அணி. மும்பை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

பும்ரா, ஆர்ச்சர் போன்றோர் இல்லாதபோது, உள்ளூர் இளம் இந்திய வீரர் எங்கிருந்தோ வந்து டெத் ஓவர்களில் மும்பை அணியை தூக்கி நிறுத்துகிறார். ஏற்கனவே மும்பை, ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக அபாரமாக செயல்பட்டார்.

இப்போது பிளே-ஆப் சுற்றில் 5 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணிக்கு தனி ஆளாக செயல்பட்டு கொடுத்திருக்கிறார். இவரை ட்விட்டரில் ஜாம்பவான்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

 

Mohamed:

This website uses cookies.