வீடியோ : தான் அடித்த பந்து ரசிகரை தாக்கியதால், ஓடி வந்து பார்க்கும் எல்லீஸ் பெர்ரி

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் – மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சிட்னி சிக்சர்ஸ் அணியின் அலிசா ஹீலி, எலிசே பெர்ரி ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள்.

அலிசா ஹீலி 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து அஸ்லேக் கார்ட்னெர் களம் இறங்கினார். இவர் எலிசெ பெர்ரி உடன் இணைந்த அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பந்து சிக்சரும், பவுண்டரியுமாக பறந்தது.

அஸ்லேக் கார்ட்னெர் 47 பந்தில் சதம் அடித்தார். பிக் பாஷ் டி20 லீக்கில் அதிரடி சதம் இதுவாகும். தொடர்ந்து விளையாடிய அவர் 52 பந்தில் 9 பவுண்டரி, 10 சிக்சருடன் 114 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

எலிசே பெர்ரி அவுட்டாகாமல் 49 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 91 ரன்கள் சேர்க்க சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் குவித்துள்ளது.

மெல்போர்ன் ஸ்டார்ஸ் வீராங்கனையான கேப்டன் கிரிஸ்டன் பீம்ஸ் அதிகபட்சமாக 4 ஓவரில்ப 51 ரன்கள் விட்டுக்கொடுத்தார்

 

இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய எல்லீஸ் பெர்ரி அடித்த சிக்சர் ஒரு சிறுவனை தாக்கி விடுகிறது. இதனால் அந்த சிறுவன் அப்படியே அந்த புல்தரையில் விழுந்துவிடுகிறான். இதனைக் கண்ட எல்லீஸ் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியே வந்து, அந்த சிறுவனை பார்த்துக் கொள்ள தனது அணியின் மருத்துவரை அழைத்து பார்க்க சொல்கிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Editor:

This website uses cookies.