விராட் கோஹ்லி ஜெர்சி நம்பரில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா..?

விராட் கோஹ்லி ஜெர்சி நம்பரில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா..?

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனது ஜெர்சியின் பின்னால் 18 என்ற எண்ணை வைத்திருப்பதற்கான காரணம் தெரியுமா உங்களுக்கு?

இந்திய ஜூனியர் அணியின் கேப்டனாக இருந்து, ஜூனியர் உலகக்கோப்பையை வென்றவர், தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி. விடா முயற்சியாலும், கடுமையான உழைப்பாலும் இன்று உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

Virat Kohli gets on top of a short ball © Getty Images

 

இந்நிலையில், அவர் அணியின் ஜெர்சியில் 18 என்ற எண்ணை வைத்திருப்பதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.2006 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியன்று அவரது தந்தை பிரேம் கோலி மாரடைப்பால் இறந்தார். அப்போது, டெல்லிக்காக விளையாடிக் கொண்டிருந்த கோலி, அந்த செய்தியை அறிந்த பின்னும், ஆட்டத்திலிருந்து பாதியிலேயே கிளம்பாமல், தனது அணிக்காக கடைசி வரை களத்தில் இருந்து விளையாடினார்.

NOTTINGHAM, ENGLAND – JULY 12: India batsman Rohit Sharma is congratulated by Virat Kohli after reaching his century during the 1st Royal London One Day International match between England and India at Trent Bridge on July 12, 2018 in Nottingham, England. (Photo by Stu Forster/Getty Images)

அவர் தந்தையின் இறந்த தேதி 18 என்பதாலும், அப்போது அவருக்கு வயது 18 என்பதாலுமே அவர் தனது ஜெர்சியில் 18 என்ற எண்ணை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து விளக்கமளித்த கோலி, ஜூனியர் உலகக்கோப்பையில் விளையாடும்போது, தனக்கு நம்பர் 18 ஜெர்சி வழங்கப்பட்டதாகவும், பிறகு அதையே நிரந்தரமாக வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.