வாழ்வா சாவா போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இங்கிலாந்து!!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரின் 41 ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி நியூசிலாந்துக்கு எதிராக பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்து அணி வாழ்வா சாவா என்கிற நிலையில் களமிறங்குகிறது இப் போட்டியில் இங்கிலாந்து அணி வெல்லும் பட்சத்தில் எவ்வித தடங்கலும் இன்றி அரையிறுதிக்கு முன்னேறும் அதேநேரம் தோல்வியை தழுவும் பட்சத்தில் நாளை பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்வியை எதிர் கொண்டு காத்திருக்க வேண்டும்.

அதேநேரம் நியூசிலாந்து அணி 11 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருந்தாலும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பு உறுதியாகும். இரு அணிகளுக்கும் இது கடைசி லீக் போட்டி என்பதால் நிச்சயம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கும்.

இங்கிலாந்து அணி இந்தியாவை எதிர்கொண்ட அதே படையுடன் எவ்வித மாற்றமுமின்றி இறங்குகிறது. நியூசிலாந்து அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இஸ் சோதி மற்றும் லாக்கி பெர்குசன் இருவரும் வெளியில் அமர்த்தப்பட்டு, டிம் சவுதி மற்றும் மேட் ஹென்றி என்று இருவரும் உள்ளே எடுத்து வரப்பட்டுள்ளன.

இங்கிலாந்து அணி விளையாடும் 11 வீரர்கள்

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயோன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வூட்

நியூசிலாந்து அணியில் ஆடும் 11 வீரர்கள்

மார்ட்டின் குப்டில், ஹென்றி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லாதம் (கீப்பர்), கொலின் டி கிராண்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னர், டிம் சவுத்தி, மாட் ஹென்றி, ட்ரெண்ட் போல்ட்

Prabhu Soundar:

This website uses cookies.