விண்டீஸ் தொடருக்கான அணி அறிவிப்பு; முதல் முறையாக 30 பேர் கொண்ட அணி!
விண்டீஸ் அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்க 30 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டன. கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து எவ்வித கிரிக்கெட் போட்டியும் நடைபெறாததால் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது.
தற்போது இங்கிலாந்தில் கொரோனா தாக்கம் மெல்லமெல்ல குறைந்து வருவதால், இரண்டு வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது வீரர்களுக்கு பயிற்சி தொடங்கியது. முதல் கட்டமாக வீரர்கள் அனைவருக்கும் உடல்நிலை பரிசோதனை செய்தபிறகே பயிற்சியை அனுமதித்திருக்கிறது.
மேலும், இரண்டு மாத காலத்திற்கு பிறகு, ஜூலை மாதம் துவங்கும் மேற்கிந்திய தீவுகள் அணி உடனான டெஸ்ட் தொடர் அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இரு வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த தொடருக்கான விண்டீஸ் அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு வீரர்களும் இங்கிலாந்திற்கு வந்து தங்களது பயிற்சியை துவங்கிவிட்டனர்.
தற்போது விண்டீஸ் அணியுடனான தொடரில் பங்கேற்க 30 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து வாரியம் தற்போது அறிவித்துள்ளது.