ஷாகின் அப்ரிடி, பும்ராஹ் எல்லாம் அப்பறம் தான்… இந்த உலகக்கோப்பையில் மாஸ் பந்துவீச்சாளர் இவர் தான்; பென் ஸ்டோக்ஸ் சொல்கிறார் !!

ஷாகின் அப்ரிடி, பும்ராஹ் எல்லாம் அப்பறம் தான்… இந்த உலகக்கோப்பையில் மாஸ் பந்துவீச்சாளர் இவர் தான்; பென் ஸ்டோக்ஸ் சொல்கிறார்

நடப்பு உலகக்கோப்பை தொடரின் மிக சிறந்த பந்துவீச்சாளர் முகமது ஷமி தான் என இங்கிலாந்து அணியின் நடச்த்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளை கெத்தாக வீழ்த்திய இந்திய அணி, தனது 7வது போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்டது.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 92 ரன்களும், விராட் கோலி 88 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணியின் ஒரு வீரர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறியதன் மூலம் வெறும் 55 ரன்களுக்கே ஆல் அவுட்டான இலங்கை அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுடனான போட்டியை போலவே இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் பந்துவீச்சில் மிரட்டி 5 விக்கெட்டுகளையும் அள்ளிய முகமது ஷமியை முன்னாள் வீரர்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், முகமது ஷமி குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ், நடப்பு உலகக்கோப்பை தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் முகமது ஷமி தான் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், “முகமது ஷமி மிக சிறந்த பந்துவீச்சாளர். நான் முகமது ஷமிக்கு எதிராக பல போட்டிகளில் விளையாடியுள்ளேன். உலகக்கோப்பையில் முகமது ஷமி பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். என்னை பொறுத்தவரையில் முகமது ஷமி தான் நடப்பு உலகக்கோப்பை தொடரின் சிறந்த பந்துவீச்சாளர். முகமது ஷமி  தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளையும் மிக சரியாக பயன்படுத்தி வருகிறார். இங்கிலாந்து அணியுடனான போட்டியிலும் முகமது ஷமி பந்துவீச்சில் மிரட்டினார், அனைத்து பேட்ஸ்மேன்களும் முகமது ஷமியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர் என்பதே உண்மை” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.