கடைசி போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழக்கிறார் அலெய்ஸ்டர் குக்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மற்றும் 160 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள அலாஸ்டர் குக் இந்திய அணியுடன் விளையாடவுள்ள ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி முடிவடைந்தவுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார். ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஏற்கனவே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தாலும், அலாஸ்டர் குக் மோசமான பார்மில் பயணம் செய்கிறார். ஆனால், செப்டம்பர் 7ஆம் தேதி ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ள கடைசி போட்டியில் கூட ஆட முடியாத நிலை அலாஸ்டர் குக்குக்கு ஏற்பட்டுள்ளது.
அலாஸ்டர் குக்கின் மனைவி அலிஸ் கர்பமாக இருக்கிறார் மற்றும் இங்கிலாந்து – இந்திய ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது அவரது மூன்றாவது குழந்தையை பெற்றெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இதன் காரணமாக அலாஸ்டர் குக் நான்காவது டெஸ்டில் விளையாட மாட்டார் என செய்திகள் வந்தது. ஆனால், 3வது குழந்தை ஐந்தாவது போட்டியின் போது தான் பிறக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வந்தது. இதனால், புதிதாக பிறக்க கூடிய குழந்தையை பார்க்க அவர் விளையாட வேண்டிய ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிகிறது.
இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு 13 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். அந்த அணியில் கீட்டன் ஜென்னிங்க்ஸுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளனர். கடைசி போட்டிக்கு இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற ஜேம்ஸ் வின்ஸ் அணியில் இடம்பெறவில்லை. ஒருவேளை கடைசி போட்டியில் அலாஸ்டர் குக் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், அவருக்கு பதிலாக இன்னொரு தொடக்கவீரரை அணியில் சேர்ப்பார்களா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.
அப்படி மாற்று வீரரை அறிவிக்காவிட்டால், ஓலி போப் தான் அலாஸ்டர் குக்குக்கு பதிலாக ஐந்தாவது போட்டியில் தொடவீரராக களமிறங்குவார். எனினும், தொடவீரர்கள் இடதுகை வீரர்களாகவே இருப்பார்கள். நான்காவது டெஸ்ட் போட்டியில் மொயின் அலி 3வது வரிசையில் இறங்கினார், ஆனால் பெரிதாக ரன் அடிக்க வில்லை. இதனால், தொடக்கவீரராக மொயின் அலியை அனுப்புவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இதற்கு முன்பு மொயின் அலியை தொடக்கவீரராக விளையாட வைத்துள்ளார் ஜோ ரூட்.
ஆனால், இங்கிலாந்து அணியின் வீரர்கள் இந்திய அணியுடன் விளையாடவுள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் அலாஸ்டர் குக் விளையாட வேண்டும் மற்றும் நல்ல முறையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றே விரும்புவார்கள். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 7ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.