நான்காவது டெஸ்ட் போட்டியில் அலெய்ஸ்டர் குக் இல்லை..?
இங்கிலாந்து அணியின் சீனியர் வீரரும், அந்த அணியின் துவக்க வீரருமான அலெய்ஸ்டர் குக்கின் மனைவிக்கு அடுத்த வாரம் குழந்தை பிறக்க உள்ளதால், குக் இந்திய அணியுடனான நான்காவது போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிர்க்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியைடைந்திருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிகம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் இந்திய அணியை வெற்றியை நோக்கி பயணித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 30ம் தேதி துவங்க உள்ள இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் குக் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
குக்கின் மனைவிக்கு அடுத்த வாரம் குழந்தை பிறக்க உள்ளதால் குக் அவரது மனைவியுடன் நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளதாகவும், தனது மனைவியின் மருத்துவ தேவைகளை பார்த்து கொள்வதாகவும் குக் திட்டமிட்டுள்ளதால் அவர் இந்திய அணியுடனான நான்காவது போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரிஸ்டோவும் சந்தேகம்
இங்கிலாந்து அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான அந்த அணியின் விக்கெட் கீப்பர் பாரிஸ்டோவும் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
நாட்டிகம் டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தின் 44-வது ஓவரின் போது, வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் வீசிய பந்தை இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ பிடித்தார். அப்போது வேகமாக வந்த பந்து அவரது இடதுகை நடுவிரலை பயங்கரமாகத் தாக்கியது. வலியால் தரையில் விழுந்து துடித்தார். உடனடியாக வெளியேறிய அவருக்கு பதிலாக ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பிங்கை கவனித்தார். பேர்ஸ்டோவுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அவர் தொடர்ந்து ஆடுவது சந்தேகம் எனத் தெரிய வந்துள்ளது.