டெஸ்ட் அணியில் பும்ரா இடம்.. புவனேஸ்வர் குமார் வெளியே?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை இன்று அறிவித்தது. அதில் இடம்பெற மாட்டார் என எதிர்பார்த்த பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். எதிர்பார்க்காத விதமாக புவனேஷ்வர் குமார் மற்றும் ரோஹித் சர்மா சேர்க்கப்படவில்லை.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஆட இருந்தது.

டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.

அதை தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டது. 18 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில், அயர்லாந்து அணியுடனான போட்டியில் பெருவிரலில காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான லிமிடெட் ஓவர்களில் அவரால் ஆட முடியாமல் வெளியேறினார்.

காயம் இன்னும் சரிவர குணமடையாததால் டெஸ்ட் தொடரிலும் இடம்பெற மாட்டார் என எதிர்பார்த்த நிலையில், முதல் மூன்று போட்டிக்கான டெஸ்ட் அணிகள் அறிவிக்கப்பட்ட பட்டியலில், பும்ரா இடம்பெற்றார்.

இதுகுறித்து கூறுகையில், முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் பும்ரா ஆடமாட்டார். இரண்டாவது போட்டியில் குணமடைந்து அணிக்கு திரும்புவார் எனவும் அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான லிமிடெட் ஓவர் போட்டிகளில் இவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் முதுகு தசைப்பிடிப்பு காரணமாக ஆடவில்லை. மூன்றாவது போட்டியில் மீண்டும் அணியில் ஆடினார்.

ஆனால், டெஸ்ட் அணிக்காக 18 பேர் கொண்ட பட்டியலில் தற்போது அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. மீண்டும் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபில் போட்டிகளில் சிறப்பாக ஆடிய மற்றும் இந்தியா ஏ அணிக்காகவும் அற்புதமாகவும் ஆடிய ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

லிமிடெட் ஓவர்களில் அசத்திய குல்தீப் டெஸ்ட் அணிகளில் சேர்க்கப்பட்டுள்ளார். யோயோ போட்டியில் மீண்டும் தேர்ந்து வந்து டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார் முஹம்மது சமி.

Vignesh G:

This website uses cookies.