இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் முதல் டெஸ்ட் போட்டியில் சரிவர செயல்படவில்லை, இதனால் விமர்சிக்கப்பட்டார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயமாக தனித்து நின்று சிறப்பாக செயல்படுவேன் எனக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பர்மிங்காமில் நடைபெற்றது. மேலும் இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 274 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் விராத் கோலி மட்டுமே 149 ரன்கள் எடுத்தார் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
13 ரன்கள் அதிகமாக உள்ள நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி துவக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட் 180 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஜோதி 94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான் மற்றும் முரளி விஜய் இருவரும் முதல் இன்னிங்சை போலவே இரண்டாவது இன்னிங்சிலும் சொதப்பினர்.
அடுத்து இறங்கிய கே எல் ராகுலும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். முருகனைப் போலவே இரண்டாவது இன்னிங்சிலும் கேப்டன் விராத் கோலியே சற்று நேரம் போராடினார். அரைசதம் கண்ட அவர் அதன் பிறகு சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை.
இறுதியில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி வெறும் 162 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியை இழந்தது.
இந்திய அணிக்கு சிறந்த துவக்கம் தருவார் என எதிர்பார்க்கப்பட்ட சிகர் தவான் முதல் இன்னிங்சில் 26 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
மேலும் இரண்டு மூன்று கேட்ச்களை விட்டதாலும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.
இது குறித்து பேசிய உள்ள தவான் கூறியதாவது, கண்டிப்பாக ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்து இருப்பீர்கள் மற்றும் எங்களின் மீது கோபமாகவும் இருப்பீர்கள். மிக குறுகிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ஏமாற்றமளிக்கிறது. நிச்சயம் முதல் போட்டியில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.