சதம் அடித்து அசத்திய ஜோ ரூட்; இந்தியாவிற்கு 323 ரன்கள் இலக்கு !!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயார்ன் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ஜேசன் ராய் 40 ரன்களும், பாரிஸ்டவ் 38 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.
அடுத்தடுத்து களமிறங்கிய இயான் மோர்கன் 53 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத ஜோ ரூட் 113* ரன்களும், கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய டேவிட் வில்லே 50 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள இங்கிலாந்து அணி 322 ரன்கள் எடுத்துள்ளது.