இங்கிலாந்து சென்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி (ஒத்திவைக்கப்பட்ட போட்டி), மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் தேதி துவங்க உள்ள நிலையில், இதற்கான பயிற்சி போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் அளிக்கப்பட்டுள்ள மூன்று சீனியர் வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்த தொடரோடு ஓய்வு அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டீஸ்வர் புஜாரா..
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ரெகுலர் வீரராக வலம் வரும் புஜாரா கடந்த ஒரு வருடமாக மோசமான பார்ம் காரணமாக தவித்து வந்தார், இதன் காரணமாக இவரை இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணி கட்டிவிட்டது.
இருந்த போதும் இவருடைய அனுபவத்தின் மீது நம்பிக்கை வைத்து, இந்திய அணி தேர்வாளர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவருக்கு வாய்ப்பு அளித்துள்ளனர்.ஒருவேளை இந்த தொடரில் இவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், நிச்சயம் எதிர்கால இந்திய அணியில் இவர் இடம் பெறவே முடியாத நிலை உள்ளது. அப்படி இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவரே கௌரவமாக ஓய்வு அறிவித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.