இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி செய்ய வேண்டிய மூன்று மாற்றங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. ஆனால் இரண்டாவது போட்டியில், பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டதால் 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி செய்ய வேண்டிய மூன்று மாற்றங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
பிரசீத் கிருஷ்ணாவிற்கு பதில் ஷர்துல் தாகூர்;
இளம் வீரரான பிரசீத் கிருஷ்ணா கடந்த இரண்டு போட்டியிலும் பெரிதாக சோபிக்கவில்லை. மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் பிரசீத் கிருஷ்ணாவிற்கு பதிலாக ஷர்துல் தாகூரை எடுக்க வேண்டும். ஷர்துல் தாகூர் சில போட்டிகளில் அதிகமான ரன்கள் விட்டு கொடுத்திருந்தாலும், பல இக்கட்டான நேரங்களில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுப்பதில் வல்லவர். அதே போன்று பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடியவரான ஷர்துல் தாகூருக்கு, மூன்றாவது போட்டிக்கான அணியில் இடம் கொடுப்பது, இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிற்கும் கூடுதல் பலத்தை சேர்க்கும்.