இந்திய அணியுடனான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
டெஸ்ட் போட்டிக்கு பிறகு டி.20 தொடரும் அதன்பிறகு ஒருநாள் தொடரும் நடைபெற உள்ள நிலையில், இதற்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் மொய்ன் அலி, பாரிஸ்டோ, சாம் கர்ரான், லிவிங்ஸ்டோன், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக், டேவிட் வில்லே போன்ற சீனியர் வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். அதே போல் ஹாரி ப்ரூக், ப்ரைடன் க்ரேஸ், கிரேக் ஓவர்டன், மேத்யூ பாரிக்சன், பில் சால்ட், ரீஸ் டாப்லே மற்றும் டேவிட் வில்லே போன்ற வீரர்களும், இந்திய அணியுடனான முதல் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஒருநாள் தொடருக்கான அட்டவணை;
1- முதல் ஒருநாள் போட்டி – ஜூலை 12 – செவ்வாய்கிழமை – ஓவல் மைதானம்
2 – இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூலை 14 – வியாழக்கிழமை – லார்ட்ஸ் மைதானம்
3- மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூலை 17 – ஞாயிற்றுக்கிழமை – எமிரேட்ஸ் டப்பர்ட் மைதானம்.
ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி;
ஜாஸ் பட்லர், மொய்ன் அலி, ஜானதன் பாரிஸ்டோ, ஹாரி ப்ரூக், பிரைடன் கிரேஸ், சாம் கர்ரான், லியம் லிவிங்ஸ்டன், கிரேக் ஓவர்டன், மேத்யூ பாரிக்ஸன், ஜோ ரூட், ஜேசன் ராய், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லே, டேவிட் வில்லே.