இந்திய அணிக்கு தொல்லை கொடுப்பதற்காகவே ரீ எண்ட்ரீ கொடுக்கும் சீனியர் வீரர்; ஆடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து அணி !!

இந்திய அணிக்கு எதிரான இந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்றே அறிவித்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் போட்டி, நாளை (ஜூலை 1ம் தேதி) துவங்க உள்ள நிலையில், இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்றே அறிவித்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனில், இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையில், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜாக் கிராவ்லே, ஓலி போப், ஜோ ரூட், ஜானி பாரிஸ்டோ, சாம் பில்லிங்ஸ் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணியின் சீனியர் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார். அதே போல் ஸ்டூவர்ட் பிராட், ஜேக் லீச்ல் மேத்யூ பாட்ஸ் போன்ற வீரர்களும் இந்திய அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்;

அலெக்ஸ் ஹேல்ஸ், ஜாக் கிராவ்லே, ஓலி போப், ஜோ ரூட், ஜானி பாரிஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், சாம் பில்லிங்ஸ், மேத்யூ பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Mohamed:

This website uses cookies.