அயர்லாந்து அணிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்று இங்கிலாந்துக்கு எதிராக ஜூலை மாதம் துவங்க இருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு உத்வேகத்துடன் உள்ளது. இந்தியா உடனான டி20 தொடருக்கு இங்கிலாந்து வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஜூலை மாதம் 3ம் தேதி முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது இந்திய அணி. இதில் 3 டி20 போட்டிகளும் 3 ஒருநாள் போட்டிகளும் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளும் ஆட இருக்கிறது.
டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு
முதல் கட்டமாக ஜூலை 3ம் தேதி துவங்க இருக்கும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. இந்நிலையில், டி20 போட்டிகளுக்கான அணியை இன்று இங்கிலாந்து வாரியம் அறிவித்தது.
டாம் கர்ரன் காயம்
இளம் வேகப்பந்துவீச்சாளர் டாம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருந்தாலும் அணியில் ஆடுவதற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆனால், தசை பிடிப்பு காரணமாக முதல் டி20 போட்டியில் ஆட மாட்டார் எனவும் இங்கிலாந்து வாரியம் கூறியது. இரண்டாவது போட்டிக்குள் சரி ஆனால் இறக்கப்பட்டுவார் எனவும் கூறியது. இவருக்கு பதிலாக மாலன் அணியில்
முதல் டி20 போட்டிக்கு புதுப்பிக்கப்பட்ட அணி
இயோன் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோவ், ஜேக் பால், ஜோஸ் பட்லர், சாம் கிர்ரன், டேவிட் மாலன் (டாம் கர்ரன் பதிலாக), அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் பிளென்கட், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், டேவிட் வில்லி