அந்த பேச்சுக்கே இடம் இல்ல… வெற்றி மட்டுமே எங்களது ஒரே இலக்கு; அதிரடியாக அறிவித்த இந்திய இளம் வீரர் !!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமே தங்களது ஒரே இலக்கு என இந்திய அணியின் இளம் வீரரான முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி (கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த போட்டி), மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெறும் இரு அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் தேதி துவங்க உள்ளது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த அணிகளான இந்தியா இங்கிலாந்து இடையேயான இந்த டெஸ்ட் போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதால், கடைசி டெஸ்ட் போட்டியை டிரா செய்தாலே தொடரை வென்றுவிடலாம் என முன்னாள் வீரர்கள் பலர் பேசி வரும் நிலையில், இங்கிலாந்து அணிக்கு ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதே இந்திய அணியின் ஒரே இலக்கு என இந்திய அணியின் இளம் வீரரான முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முகமது சிராஜ் பேசுகையில், “இந்திய அணி இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம் தான். ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை இந்திய அணியே வெல்லும் என முழுமையாக நம்புகிறேன். ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமே எங்களது இலக்கு, டிரா செய்ய வேண்டும் என நினைக்க கூட மாட்டோம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை வென்றதை போன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரையும் வெல்வோம், இந்திய அணிக்கான எனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க வேண்டும் என்பது எனது நோக்கம்” என்று தெரிவித்தார்.

ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி;

இந்திய அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்றே அறிவித்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில், ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற சீனியர் வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்;

அலெக்ஸ் ஹேல்ஸ், ஜாக் கிராவ்லே, ஓலி போப், ஜோ ரூட், ஜானி பாரிஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், சாம் பில்லிங்ஸ், மேத்யூ பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Mohamed:

This website uses cookies.