முகமது சிராஜ் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட இதுதான் காரணம் ; பெங்களூர் அணியின் பயிற்சியாளர் பேட்டி !!

முகமது சிராஜ் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு தகுதியான வீரராக உருவெடுத்துவிட்டார் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹசன் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரராக வலம் வரும் இளம் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஒரு கட்டத்தில் மோசமான பந்துவீச்சால் நெட்டிசன்களின் செல்ல பிள்ளையாக திகழ்ந்தார்.

கடுமையான விமர்சனத்திற்கு ஆளான முகமது சிராஜ் இதற்கு மேல் கிரிக்கெட்டில் வாய்ப்பு கொடுக்கப்பட மாட்டாது என்று கூறும் அளவிற்கு விமர்சிக்கப்பட்டார். இருந்த போதும் இவருடைய கடின முயற்சியால் தன்னுடைய மோசமான பார்மிலிருந்து மீண்டு வந்து சிறப்பாக பந்து வீசத் துவங்கினார்.

இதன் காரணமாக 2020-2021 ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் வாய்ப்பு முகமது சிராஜுக்கு கிடைத்தது, இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிராஜ் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ரெகுலர் வீரராக வலம் வந்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் முகமது சிராஜை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹஸன் பாராட்டி பேசியுள்ளார்.

முகமது சிராஜ் குறித்து மைக் ஹசன் பேசுகையில்,“என்னை பொருத்தவரையில் சிராஜின் திறமை மற்றும் வேகத்தை மாற்றி பந்து வீசும் யுக்தி லிமிடெட் அவர் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதற்கு உதவும், ஆனால் அவருக்கு அடிப்படை திறமைகள் மிகவும் உதவியாக இருக்கிறது, எந்த ஒரு சிறந்த வீரராக இருந்தாலும் அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டால் மட்டும் தான் நன்றாக விளையாட முடியும், அதை செய்து சிராஜ் டெஸ்ட் தொடரின் சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார்.தற்போது டெஸ்ட் போட்டியில் அதிக ஓவர் வீசினாலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு, தான் உடற்தகுதியுடன் இருக்கிறேன் என்பதை சிராஜ் நிரூபித்துள்ளார். மேலும் அவர் மீண்டும் மீண்டும் ஒரே செயலை செய்து வருகிறார், அவர் தான் இந்த நாளில் என்ன செய்யப் போகிறோம் என்பதை நன்கு உணர்ந்துள்ளார், ஒரு பயிற்சியாளராக நான் இதை மிக முக்கியம் என்று கருதுகிறேன், அவர் தன்னுடைய செயல்பாட்டிற்கு பெரியளவு நேரத்தை செலவிடவில்லை, அவர் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியுள்ளார்.அதேபோன்று தற்போது டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்று முகமத் சிராஜை மைக் ஹெசன் பாராட்டி பேசியிருந்தார்.

மேலும் முகமது சிராஜ் தற்பொழுது தன்னம்பிக்கையுடன் சிறப்பாக செயல்படுவதற்கு பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அவர் மீது வைத்த நம்பிக்கைதான் காரணம் என்றும் மைக் ஹெசன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.