இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டிகளுக்கு 18 வயதான இளம் இந்திய வீரர் பிரித்திவ் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது இந்திய அணியில் அவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பு ஆகும். இதற்கு முன்னதாக இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் ஆடியதிவில்லை. ஆனால் அண்டர்-19 தொடரில் ஆடியுள்ளார். தற்போது இந்திய சீனியர் அணியினருடன் முதன்முறையாக பயிற்சி எடுத்து வருகிறார் பிரித்திவ் ஷா.
முரளி விஜய்க்குப் பதிலாக பிரித்வி ஷா இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டது குறித்து பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் திராவிடின் ஆலோசனையின் பேரில் மாயங்க் அகர்வாலைக் காட்டிலும் பிரித்வி ஷா சிறந்த தேர்வு என்று முடிவு எடுக்கப்பட்டதாக அஜித் அகார்க்கர் கூறியுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை அணியின் தலைமைத் தேர்வாளர் மிலிங் ரெகே, ரஞ்சி அரையிறுதிக்கு பிரித்வி ஷாவைத் தேர்வு செய்யத் தயக்கம் காட்டிய போது இந்தியா ஏ, யு-19 பயிற்சியாளர் ராகுல் திராவிடை ஆலோசனை செய்து பிரித்வி ஷாவை அணியில் சேர்த்தார்.
சமீபமாக மாயங்க் அகர்வாலும் பிரமாதமாகத் தொடக்கத்தில் ஆடிவருவதால் தேர்வாளர் எம்.எஸ்.கே. பிரசாத்துக்கு பிரித்வி ஷாவா, அகர்வாலா என்பதில் குழப்பம் மேலிட்டுள்ளது.
இப்போது இவரும் ராகுல் திராவிடை கலந்தாலோசித்தே பிரித்வி ஷாவைத் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அஜித் அகார்க்கர் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்குக் கூறும்போது, “நிச்சயம் ராகுல் திராவிட்டை அவர்கள் ஆலோசித்திருப்பார்கள் என்றே நான் கருதுகிறேன். திராவிட் நிச்சயம் பிரித்வி ஷாவின் வயதை வைத்து ராகுல் திராவிட் பாசிட்டிவாக தெரிவித்திருக்க மாட்டார், நிச்சயம் அவரது திறமையை திராவிட் நன்றாக அவதானித்திருப்பார் என்றே நான் கருதுகிறேன்.
மேலும் அவர் பிளேயிங் லெவனில் ஆட முடியாவிட்டாலும் இப்போதைய வீரர்கள் ஓய்வறைச் சூழல் அவருக்கு ஒரு பெரிய உத்வேகத்தை அளிக்கும். இவர்களுடன் சேர்ந்து ஆடுவதன் மூலம் அவர் இன்னும் சிறந்த பேட்ஸ்மனாகி விடுவார்” என்றார் அகார்க்கர்.