இந்த மாதிரி தரமான வீரர் கிடைப்பதே ரொம்ப கஷ்டம்; இளம் வீரரை பாராட்டி பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் !!

ரிஷப் பண்ட் விளையாடிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று சஞ்சய் மஞ்சரெக்கர் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாகவே வெறும் வெற்றியை மட்டுமே சுவைத்து வந்த இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-1 என தன் சொந்த மண்ணிலேயே தோல்வியை தழுவியது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் இளம் இந்திய அணி வீரர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை மிக கச்சிதமாகவும் சிறப்பாகவும் செய்தது தான்.

குறிப்பாக இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது போட்டியில் சீனியர் வீரர்கள் சொதப்பிய நிலையில் 5வது விக்கெட்டிர்க்கு பார்ட்னர்ஷிப் சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதில் ரிஷப் பண்ட் அனைவரது விமர்சனத்தையும் தகர்த்தெறியும் வண்ணம் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இவருடைய சிறப்பான ஆட்டம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே பாராட்டும் வகையில் அமைத்துள்ளது.

இந்த நிலையில் அதிகமாக விமர்சனம் மட்டுமே செய்யக்கூடிய சஞ்சய் மஞ்சரெக்கர் ரிஷப் பண்டின் சிறப்பான அட்டம் குறித்து பாராட்டி பேசியுள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் மஞ்சரேக்கர் பேசுகையில்,“பொறுப்பை உணர்ந்து செயல்படும் வகையில் பார்த்தால் ரிஷப் பண்ட் உண்மையிலேயே பொறுப்பானவர் தான்,டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் செய்த சாதனையை பார்த்தால் ரிஷப் பண்ட் உண்மையிலேயே சிறந்த வீரர் தான்,பொறுப்பை உணர்ந்து செயல்பட முடியவில்லை என்றால் உங்களால் இதுபோன்று விளையாட முடியாது,அவருடைய ஆட்டம் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பது போல் இருந்தது.இந்த ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடிய விதம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்,அவர் அமைதியாக விளையாடிய விதம் பார்ப்பதற்கே விறுவிறுப்பாக இருந்தது,நம்முடைய இந்திய அணியில் ஏதோ ரகசியம் உள்ளது, இவர் போன்ற வீரர்களை இந்திய அணி தலைமுறை தலைமுறையாக கொடுத்து வருகிறது” என்று சஞ்சய் மஞ்சரெக்கர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.